Home /News /education /

முதலாம் ஆண்டு கலை அறிவியல் கல்லூரி வகுப்புகள் இன்று முதல் துவக்கம்

முதலாம் ஆண்டு கலை அறிவியல் கல்லூரி வகுப்புகள் இன்று முதல் துவக்கம்

கல்லூரி மாணவர்கள்

கல்லூரி மாணவர்கள்

மாணவர் சேர்க்கையை முடித்த கல்லூரிகள் வகுப்புகளை தொடங்கலாம் என உயர்கல்வித் துறை முன்னதாக உத்தரவிட்டிருந்ததது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல்  துவங்கியது.

    நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தாலும் மாணவர் சேர்க்கையை முடித்த கல்லூரிகள் வகுப்புகளை தொடங்கலாம் என உயர்கல்வித் துறை முன்னதாக உத்தரவிட்டிருந்ததது.

    அதனை தொடர்ந்து இன்று முதல் முதலாமாண்டு வகுப்புகளுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.  சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியர்களை கல்லூரி முதல்வர் ரோஜா பூ மற்றும் இனிப்புகளை கொடுத்து வரவேற்றார்.

    இதையும் வாசிக்கபொறியியல் கலந்தாய்வு : 7.5% இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்காதவர்களுக்கு மறு வாய்ப்பு - தமிழக அரசு

    கொரோனா காலகட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகள் கற்றல் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நேரடியாக உயர்கல்விக்கான வகுப்புகளை தொடங்காமல் முதல் ஒரு வாரத்திற்கு அடிப்படை வகுப்புகளை நடத்தி விட்டு அதன் பிறகு பாடங்களை நடத்த வேண்டும் எனவும் கல்லூரி பேராசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுளளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: College Admission

    அடுத்த செய்தி