முகப்பு /செய்தி /கல்வி / TANCET : முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு

TANCET : முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்ச்., எம். பிளான் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு 2023, பிப்ரவரி  26ம் தேதி காலை மணி 10 மணி முதல் 2 மணி வரையிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

TANCET- 2023:  2023ம் ஆண்டிற்கான எம்பிஏ, எம்சிஏ,எம்இ/எம்.டெக் முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் (TANCET- 2023) தேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், முதுநிலை படிப்புகளான எம்பிஏ, எம்சிஏ மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளை ஆண்டுதோறும் சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இத்தேர்வுகளில் கலந்து கொண்ட மாணவர்கள் மட்டுமே தமிழ்நாட்டிலுள்ள இக்கல்விகளுக்கான படிப்புகளைக் கொண்ட எந்தக் கல்லூரிகளிலும் சேர முடியும்

மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும்  பொறியியல்/கலை அறிவியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம்‌, சுயநிதி பொறியியல்/கலை அறிவியல் கல்லூரிகள்  ஒப்படைத்த இடங்களுக்கான பொது நுழைவுத் தேர்வை   (TANCET) அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

2022 கல்வியாண்டிற்கான டான்செட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்றுவருகிறது. எம்சிஏ முதுநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 1ம் தேதி தொடங்கிய நிலையில், எம்பிஏ படிப்புகளுக்கு வரும் 6ம் தேதி தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், 2023 கல்வியாண்டிற்கான டான்செட் நுழைவுத் தேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, எம்சிஏ படிப்புக்கான நுழைவுத் தேர்வு, 2023, பிப்ரவரி மாதம் 25ம் தேதி நடைபெறும். தேர்வு நேரம்,காலை 10 மணிமுதல் பகல் 12 மணி வரை.

எம்பிஏ படிப்புக்கான நுழைவுத் தேர்வு, 2023, பிப்ரவரி 25ம் தேதி பிற்பகல் மணி 2.30 முதல் 4.30 மணி வரையிலும் நடைபெறும்.

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்ச்., எம். பிளான் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு 2023, பிப்ரவரி  26ம் தேதி காலை மணி 10 மணி முதல் 2 மணி வரையிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க:  வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக கூறி தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடுவதா? ராமதாஸ் கேள்வி

அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், tancet.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 044-22358289 / 044-22358314 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். tancetau@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.

First published:

Tags: Anna University