12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியது...!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியது...!
(கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: March 2, 2020, 10:00 AM IST
  • Share this:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி மார்ச் மாதம் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி நடைபெறுகிறது. இந்த தேர்வை, 7276 பள்ளிகளில் இருந்து 8,16,359 மாணவர்கள் எழுதுகிறார்கள். மாணவர்களை காட்டிலும் மாணவிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இவர்களில், புதுச்சேரி மாணவர்கள் 14,958 பேர் ஆவர் மற்றவர்கள் தமிழக மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


4,41,612 பேர் மாணவியரும், 3,74,747 பேர் மாணவர்கள். மாணவர்களை விட, 66,865 மாணவிகள் கூடுதலாக எழுதுகின்றனர்.

தேர்வு எழுதுவதற்காக 3012 மையங்களில் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. இன்று துவங்கும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்ட அடிப்படையில் 600 மதிப்பெண்களுக்கு நடைபெறுகிறது.

சென்னையில் 410 பள்ளிகளைச் சேர்ந்த 47,264 மாணவர்கள், 160 மையங்களில் தேர்வில் பங்கேற்கின்றனர். தனித்தேர்வர்களாக 19,166 மாணவர்களும் தேர்வில் பங்கேற்கின்றனர்.வேலுார், கடலுார், சேலம், கோவை, மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் சென்னை புழல் ஆகிய மத்திய சிறைகளில் உள்ள 62 ஆண் சிறைவாசிகளும் தேர்வெழுத இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்த மாணவர்களில், 4,54,367 பேர், தமிழ் வழியிலும், மற்றவர்கள் ஆங்கில வழியிலும் தேர்வை சந்திக்கின்றனர்.
அனைத்து மாவட்டங்களிலும், ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், கல்வித்துறை அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படைகளும் அதிகளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த குழுவில், 4,000 பேர் இடம் பெற்றுள்ளனர். தேர்வு முறைகேடுகளில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது எனவும், மீறி ஈடுபட்டால் வாழ்நாள் தடையும் ,3முதல் 5ஆண்டுகள் ஆண்டுகளுக்கு தேர்வெழுத தடை உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24 ம் தேதி வெளியிடப்படுகிறது.

பொதுத்தேர்வு துவங்குவதையொட்டி, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் போன்றோர், தேர்வு தொடர்பான புகார்களை அளிப்பதற்கு வசதியாக, சென்னையில் உள்ள தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில், 12 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டறை செயல்பட உள்ளது.

தேர்வு காலங்களில், காலை 8 மணி முதல், இரவு 8 மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும்:

9385494105

9385494115

9385494120

ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு, புகார்களை தெரிவிக்கலாம் எனவும், அதன்மீது உடனுக்குடன்நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Also see...
First published: March 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading