Home /News /education /

புதிதாக 6 மாத சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் : தமிழ்நாடு  வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

புதிதாக 6 மாத சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் : தமிழ்நாடு  வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

இது தொடர்பாக 9442111048 / 9489051046 / 0422-6611229 என்ற தொலைபேசி எண்களையும்,odl@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இந்த  கல்வியாண்டு முதல் நகர்ப்புற மக்களுக்கான சான்றிதழ் படிப்பை மீண்டும் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு  வேளாண்மைப் பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைத்தூரக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் கடந்த 2005ம் ஆண்டு துவங்கப்பட்டது.  இந்த இயக்ககத்தில்,  தென்னை சாகுபடித் தொழில்நுட்பங்கள், காளான் வளர்ப்பு உள்ளிட்ட 44 வகையான ஆறுமாத கால சான்றிதழ் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,நகர்ப்புற மக்களுக்கான சான்றிதழ் படிப்பை மீண்டும் தொடங்க இருப்பதாக  இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்,"   வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள உழவர்கள், மகளிர்கள், இளைஞர்கள், பள்ளிப்படிப்பை தொடர இயலாதவர்கள், சுயதொழில் முனைவோர்கள், கிராமங்களில் சிறுதொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ளவர்கள் ஆகியோர் தங்களின் தொழில்நுட்ப அறிவையும் அனுபவங்களையும் வளர்த்துக்கொள்ளும் வண்ணம் பல சான்றிதழ் பாடங்கள், வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு மற்றும் இதர பட்டயப்படிப்புகள் இயக்ககத்தால்  நடத்தப்பட்டு வருகின்றன.

10 ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற மக்களுக்கான சான்றிதழ் படிப்பை மீண்டும் தொடங்குகிறது. தொலைதூரக் கல்வியை விரும்பும் நகர்புற வாசிகள் மற்றும் நகரங்களின் வரையறுக்கப்பட்ட நிலப்பகுதிகளில் நிலம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, பொது இடங்கள், சுகாதாரம், காற்று மற்றும் நீர் தரம் போன்றவற்றை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் சுயவேலைவாய்ப்புத் திட்டத்தைத் தொடங்க ஆர்வமுள்ள நகர்ப்புறவாசிகளுக்காக இந்தப் பாடங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதில் அலங்காரத் தோட்டம் அமைத்தல், நாற்றங்கால் பராமரிப்புத் தொழில்நுட்பங்கள், மாடி மற்றும் வீட்டுத்தோட்டம் அமைத்தல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகிய தலைப்புகளில் இந்த ஆண்டு துவங்கப்பட உள்ளன" என்று தெரிவித்தது.

மேலும், 44 வகையான ஆறுமாத கால சான்றிதழ் பாடங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், அவற்றில் தென்னை சாகுபடித் தொழில்நுட்பங்கள், காளான் வளாப்பு, மூலிகைப் பயிர்கள், தோட்டக்கலைப்பயிர்களுக்கான நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் மற்றும் டியிர்பெருக்கமுறைகள், நவீன கரும்பு சாகுபடித் தொழில்நுட்பங்கள். திடக்கழிவு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் தொழில்நுட்பங்கள், அங்கக வேளாண்மை, பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், ரொட்டி மற்றும் சாக்லேட் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள், தேனீ வளர்ப்பு, அலங்காரத் தோட்டம் அமைத்தல் ஆகிய பாடங்கள் பயில்வோர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் இயக்ககம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்தது.

இதையும் வாசிக்க:  TNPSC: வனத்தொழில் பழகுநர் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது

எனவே, கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் விவசாயம் சார்ந்த தொழில்களை நிறுவ ஆர்வமுள்ளவர்கள் இந்த இயக்கத்தின் மூலம் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக 9442111048 / 9489051046 / 0422-6611229 என்ற தொலைபேசி எண்களையும்,odl@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இதன் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

செய்தியாளர்: வைரபெருமாள் அழகுராஜன்
Published by:Salanraj R
First published:

Tags: Agriculture

அடுத்த செய்தி