Tamil Nadu 12th Result 2020 | தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

Tamil Nadu 12th Result 2020 மாணவர்களின் மொபைல் எண்ணுக்கு குறுச்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Tamil Nadu 12th Result 2020 | தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
கோப்பு படம்
  • Share this:
தமிழத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் தேர்வு நடைபெற்றது. கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இறுதி ஒரு பாடத்துக்கான தேர்வை ஏராளமான மாணவர்கள் எழுத முடியாத சூழல் ஏற்பட்டது.

வழக்கமாக 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் மே மாத தொடகத்திலேயே வெளியிடப்படும். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில், இன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், மாணவர்களின் மொபைல் எண்ணுக்கு குறுச்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு தேர்வை 7,79,931 மாணவர்கள் எழுதினர். இதில் மாணவர்கள் 3,55,646 பேரும், மாணவியர் 4,24,285 பேரும் எழுதினர்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading