Tamil Nadu 12th Result 2021 | பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று காலை 11 மணிக்கு வெளியீடு...

மாதிரி படம்

12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் இன்று வெளியிடப்படுகிறது.

  • Share this:
    கொரோனா காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதன்படி 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 3 பாடங்களின் சராசரி அடிப்படையில் 50 மதிப்பெண்களும், 11ம் வகுப்பில் 20 விழுக்காடும், 12ம் வகுப்பில் செய்முறை மற்றும் அகமதிப்பீட்டில் 30 விழுக்காடு மதிப்பெண்களும் அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து 12ம் வகுப்பு இறுதி மதிப்பெண் கணக்கிடும் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு முடிவுகள் வெளியாகிறது.

    இதற்காக 4 இணையதளங்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதியை குறிப்பிட்டு மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம். 22ம் தேதி தங்களது மதிப்பெண் பட்டியலை இரு இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளிலேயே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: பள்ளிகல்வித்துறை

    பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடுவது எப்படி ?



    இணையதள முகவரி:

    1. www.tnresults.nic.in,

    2. www.dge1.tn.nic.in-ல் தெரிந்து கொள்ளலாம்

    3. , www.dge2.tn.nic.in

    4. www.dge.tn.gov.in .
    Published by:Vaijayanthi S
    First published: