Tamil Nadu 12th Result 2020 | 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: அரசுப் பள்ளிகளில் ஈரோடு மாவட்டம் முதலிடம்

12 ஆம் வகுப்பு தேர்வில் மாணவியர் 94.30 சதவீதமும், மாணவர்கள் 89.41 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

Tamil Nadu 12th Result 2020 |  12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: அரசுப் பள்ளிகளில் ஈரோடு மாவட்டம் முதலிடம்
(கோப்புப் படம்)
  • Share this:
தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியானது. அரசுப் பள்ளிகளில் அதிகபட்சமாக ஈரோட்டில்  94.51 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களாகவும், தனித் தேர்வர்களாகவும் மொத்தமாக 7,99,171 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். அதில், பள்ளி மாணவர்களாக 7,79,931 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களின் 92.3 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

அதில், மாணவியர் 94.30 சதவீதமும், மாணவர்கள் 89.41 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.


மாணவர்களை விட மாணவியர் 5.39 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 94.51 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு தேர்வை 7,79,931 மாணவர்கள் எழுதினர். இதில் மாணவர்கள் 3,55,646 பேரும், மாணவியர் 4,24,285 பேரும் எழுதினர்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading