பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது...?

Tamil Nadu 12th Result 2020 | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் நீடித்துக்கொண்டே இருக்கிறது

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது...?
(கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: July 6, 2020, 11:41 AM IST
  • Share this:
பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தள்ளிப்போகின. மேலும், ஊரடங்கு காரணமாக கடைசி தேர்வை பல மாணவர்கள் எழுத முடியாமல் போனது.

இதற்காக அறிவிக்கப்பட்ட மறுதேர்வும் கொரோனா திவிரமடைந்ததால் ஒத்திவைக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. பத்தாம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பிளஸ் 2 மறுதேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டது.

விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்தாலும், மறுதேர்வு வைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஜுலை 6 அல்லது 7-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியான நிலையில், மறுதேர்வு வைக்க முடியாத சூழல் இருப்பதால், தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல் இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.

படிக்க: சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இன்று முதல் கட்டுப்பாடுகள் தளர்வு - என்னென்ன இயங்கும்...?

படிக்க: சீன அதிபருக்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்
ஜுலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மறுதேர்வு இம்மாதம் நடத்த வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. இதனால், மறுதேர்வு வைத்து, அதனை மதிப்பீடு செய்து தேர்வு முடிவுகளை வெளியிட மேலும் கால அவகாசம் தேவைப்படும்.

பிளஸ் 2 தேர்வு முடிவை அடுத்து, பொறியியல் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளுக்கான அட்மிஷன் தொடங்கும். ஆனால், தற்போது மறுதேர்வுக்கே சிக்கல் நீடிக்கும் நிலையில், உயர்கல்வி அட்மிஷன்கள் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஏற்கனவே, நீட், ஜே.இ.இ தேர்வுகள் செப்டம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading