ஹோம் /நியூஸ் /கல்வி /

10,12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முழு அட்டவணை இங்கே

10,12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முழு அட்டவணை இங்கே

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மாணவர்களின் மனஉளைச்சலை போக்கும் விதமாக வேதியியல், உயிரியல், இயற்பியல், கணிதம் ஆகிய  பாடங்களுக்கு இடையே  3 நாட்கள்  இடைவெளி வழங்கப்பட்டிருக்கிறது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மாநிலத்தில் மொத்தம் 8 லட்சத்து 22 ஆயிரத்து 684 பள்ளி மாணாக்கர்கள் ப்ளஸ் 2 தேர்வு எழுதுகிறார்கள்.

  கொரோனா நோய்த் தோற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் எந்தவித நேரடித் தேர்வு நடைபெறாத நிலையில், இன்று மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்கிறார்கள். எதற்காகவும் மன அழுத்தம் கொள்ள வேண்டாம் என்றும்,  இயல்பாகவே தேர்வை எதிர்கொள்ளுங்கள் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி சமூக ஆர்வலர்கள் வரை மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து வருகின்றனர்.

  11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இம்மாதம் 10ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதிவரையும், பத்தாம் வகுப்புத் தேர்வுகள் 6ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.

  மாணவர்களின் மனஉளைச்சலை போக்கும் விதமாக வேதியியல், உயிரியல், இயற்பியல், கணிதம் ஆகிய  பாடங்களுக்கு இடையே  3 நாட்கள்  இடைவெளி வழங்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக  பயமில்லாமல் மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராக முடியும்.

  12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை: 

  10.00 a.m. To 10.10 a.mReading the question paper
  10.10 a.m to 10.15 a.mVerification of Particulars by the Candidate
  10.15 a.m to 1.15 p.mDuration of the Examination
  DATEDAYSUBJECT
  05.05.2022THURSDAYPart -ILANGUAGE
  09.05.2022MONDAYPart -IIENGLISH
  11.05.2022WEDNESDAYPart -IIICOMMUNICATIVE ENGLISH/ ETHICS AND INDIAN CULTURE/ COMPUTER SCIENCE/ COMPUTER APPLICATIONS/ BIO-CHEMISTRY/ADVANCED LANGUAGE(TAMIL)/ HOME SCIENCE/POLITICAL SCIENCE STATISTICS
  13.05.2022FRIDAYPart -IIICHEMISTRY/ACCOUNTANCY GEOGRAPHY
  17.05.2022TUESDAYPart -IIIMATHEMATICS /ZOOLOGY COMMERCE/ MICRO BIOLOGY/NUTRITION AND DIETETICS /TEXTILE & DRESS DESIGNING /FOOD SERVICE MANAGEMENT/ AGRICULTURAL SCIENCE/ NURSING (General)/NURSING Vocational
  20.05.2022FRIDAYPart -IIIPHYSICS/ECONOMICS/COMPUTER TECHNOLOGY
  23.05.2022MONDAYPart -IIBIOLOGY/BOTANY HISTORY/BUSINESS MATHEMATICS AND STATISTICS BASIC ELECTRICAL ENGINEERING/BASIC ELECTRONICS ENGINEERING/ BASIC CIVIL ENGINEERING/BASIC AUTOMOBILE ENGINEERING/ BASIC MECHANICAL ENGINEERING /TEXTILE TECHNOLOGY/OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP
  28.05.2022SATURDAYPART -IVVOCATIONAL SUBJECTS

  பத்தாம் வகுப்பு தேர்வு (SSLC EXAMINATION) -MAY -2022 

  நாளை முதல் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்குகிறது. வரும் 30ஆம் தேதி வரை நடைபெறும் இத்தேர்வில், 9 லட்சத்து 38 ஆயிரத்து 337 பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொள்ளவுள்ளனர்.

  10.00 a.m. To 10.10 a.mReading the question paper
  10.10 a.m to 10.15 a.mVerification of Particulars by the Candidate
  10.15 a.m to 1.15 p.mDuration of the Examination

  DATEDAYSUBJECT
  06.05.2022FRIDAYPart -ILANGUAGE
  14.05.2022SATURDAYPart -IVOPTIONAL LANGUAGE
  18.05.2022WEDNESDAYPart -IIENGLISH
  21.05.2022SATURDAYPart -IVVOCATIONAL SUBJECT
  24.05.2022TUESDAYPart -IIIMATHEMATICS
  26.05.2022THURSDAYPart -IIISCIENCE
  30.05.2022MONDAYPart -IIISOCIAL SCIENCE

  பொதுவான அறிவிப்பு:

  பொதுத்தேர்வு மையங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செல்ஃபோன் எடுத்துவர அரசு தேர்வுகள் இயக்ககம் தடை விதித்துள்ளது.  தேர்வின்போது மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால், அதற்கு உடந்தையாக பள்ளி நிர்வாகம் இருப்பது தெரியவந்தால், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வில் காப்பி அடித்தால், ஓராண்டு தேர்வு எழுத தடையும், ஆள் மாறாட்டம் செய்தால், வாழ்நாள் முழுவதும் தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: 12th exam, Department of School Education, Government school, Plus 2 Examination, Public exams, School student, Tamil News, Tamilnadu