முகப்பு /செய்தி /கல்வி / தமிழ்நாடா - தமிழகமா என்று விவாதத்தைவிட இதுதான் அவசியம் - அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்!

தமிழ்நாடா - தமிழகமா என்று விவாதத்தைவிட இதுதான் அவசியம் - அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்!

விஜயகாந்த்

விஜயகாந்த்

12ம் வகுப்புத் தமிழ் மொழி தேர்வை எழுத  50 ஆயிரம் மாணவர்கள் வராதது மிகப்பெரிய வேதனையை அளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் மொழி  நம் தாய் மொழியாக இருக்கும் நிலையில், 12ம் வகுப்புத் தமிழ் மொழி தேர்வை எழுத  50 ஆயிரம் மாணவர்கள் வராதது மிகப்பெரிய வேதனையை அளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கல்விக்கண் திறந்த காமராஜரால் கல்வியில் தமிழகம் முதன்மை இடத்தில் இருந்த நிலையில், தற்போது கல்வியின் தரம் குறைந்து கொண்டே வருவது பெரும் அதிர்ச்சியை தருகிறது.

தமிழ் மொழியின் அவசியத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  தமிழ்நாடா - தமிழகமா என்று விவாதிப்பவர்கள் தமிழ் மொழியின் மகத்துவத்தை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தமிழ் மொழி தேர்வை மாணவர்கள் எழுதாதது குறித்து தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்து, அதற்கு தீர்வு காண வேண்டும்.

இதையும் வாசிக்க: "பிளஸ் 2 மொழித் தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை" - அதிர்ச்சித் தகவல்

இனி வரும் காலங்களில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்யும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இது ஒரு தலை குனிவு. தேர்தலின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து வருவது போல், தேர்வுகள் மீது மாணவர்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

இவ்வாறு, அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Vijayakanth