முகப்பு /செய்தி /கல்வி / TamilNadu 12th Board Exam 2023: பிளஸ் 2 முதல் தேர்வு நிறைவு.... தமிழ் முதல்தாள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் கருத்து!

TamilNadu 12th Board Exam 2023: பிளஸ் 2 முதல் தேர்வு நிறைவு.... தமிழ் முதல்தாள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் கருத்து!

ஒரு மதிப்பெண் வினாக்கள் சில புத்தகத்தின் உட்பகுதியில் இருந்து கேட்கப்பட்டதாகவும் பெரும்பான்மையான வினாக்கள் பாடப் புத்தகத்திலிருந்து நேரடியாக கேட்கப்பட்டதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

12ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ் மொழித்தாள் பாடத்தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற்றது. இதில் முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரிபார்ப்பதற்கும், பின்னர் தொடர்ந்து 3 மணி நேரம் தேர்வை எழுதுவதற்கும் அவகாசம் வழங்கப்பட்டது. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடத் தேர்வுகள் நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 51 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 185 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன.

சென்னையில் 46 ஆயிரத்து 982 மாணவ, மாணவிகள் 180 தேர்வு மையங்களில் தேர்வெழுதினர். தேர்வறையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.  சென்னையில் 46 ஆயிரத்து 982 மாணவ, மாணவிகள் 180 தேர்வு மையங்களில் தேர்வெழுதினர். தேர்வறையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.

தேர்வு குறித்த கருத்து தெரிவித்த மாணவர்கள் தேர்வு எளிமையாக இருந்ததாக தெரிவித்தனர். ஒரு மதிப்பெண் வினாக்கள் சில புத்தகத்தின் உட்பகுதியில் இருந்து கேட்கப்பட்டதாகவும் பெரும்பான்மையான வினாக்கள் பாடப் புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டதாகவும் இதனால் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிப்பது எளிதாக இருந்ததாகவும் மாணவர்கள் கூறினர்.

First published:

Tags: 12th exam