முகப்பு /செய்தி /கல்வி / 12ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஆங்கில பாடத்தேர்விற்கு சுமார் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட்!

12ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஆங்கில பாடத்தேர்விற்கு சுமார் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட்!

காட்சிப்படம்

காட்சிப்படம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

இன்று நடைபெற்று 12ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் 50,000  மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, கடந்த 13ம் தேதி நடைபெற்ற  தமிழ்ப்பாடத் தேர்வை 50,000 மாணவர்கள் எழுதாதது இருந்தனர். இந்த மாணவர்கள் அச்சம் காரணமாக அடுத்து வரும் தேர்வுகளையும்  எழுதாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற ஆங்கிலத் தேர்விலும் தேர்வு எழுதாதவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக உள்ளது.

தேர்வுக்கு வராத மாணவர்களின் பட்டியலை தயாரித்து, அந்த மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு வழங்க வேண்டும் என்றும்  அடுத்து வரும் துணை தேர்வுகளில் அம்மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

First published:

Tags: 12th exam