11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?

கோப்புப் படம்

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  சென்ற ஆண்டு முதல் 11-ம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது இந்தத் தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறவைடைந்து முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர்.

  தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

  ஏப்ரல் 19-ம் தேதி 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது 10 மற்றும் 11-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிகளும் நிறைவடைந்துள்ளன.

  2019-ம் ஆண்டு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டனர். தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து மதிப்பெண்களைக் கணினியில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

  தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதியன்று வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர்.

  மேலும் பார்க்க:
  Published by:Tamilarasu J
  First published: