முகப்பு /செய்தி /கல்வி / தனித்தேர்வர்களுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு : பதிவிறக்கம் செய்வது எப்படி?

தனித்தேர்வர்களுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு : பதிவிறக்கம் செய்வது எப்படி?

காட்சிப்படம்

காட்சிப்படம்

தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in  என்ற இணையதளத்திற்குச் சென்று HALL TICKET என்ற  வாசகத்தினை Click செய்து அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் தேர்வு ஹால்டிக்கெட்டினை வரும் 17.03. 2023 அன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தனித்தேர்வர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று HALL TICKET என்ற  வாசகத்தினை   Click செய்து,  "SSLC PUBLIC EXAMINATION APRIL 2023 HALL TICKET DOWNLOAD"என்ற வாசகம் தோன்றும். அதில், தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number), நிரந்தரப் பதிவெண் (Permanent Register Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth) பதிவு செய்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதையும் வாசிக்க: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஆங்கில பாடத்தேர்விற்கு சுமார் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் (Science Practiyal Examinations) 20.03.2023 முதல் 24.03.2023 வரை அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெற உள்ளன. அறிவியல் பாட செய்முறைத்தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்விற்கான கால அட்டவனையை  www.dge.tn.gov.in  என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

First published:

Tags: 10th Exam, 10th Exam Result