முகப்பு /செய்தி /கல்வி / 10th Exam, Result 2023: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை, முடிவுகள் வெளியாகும் தேதி - முழு விவரம்

10th Exam, Result 2023: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை, முடிவுகள் வெளியாகும் தேதி - முழு விவரம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையும், தேர்வு முடிவு தேதி குறித்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு (SSLC EXAMINATION -APRIL -2023)  தேதி குறித்த அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது.

முன்னதாக, 2023 கல்வியாண்டிற்கான ஏப்ரல் மாதம் 10-ம் வகுப்பு தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. அதன்படி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 06.04.2023 முதல் 20.04.2023  வரையிலான நாட்களில் நடைபெற உள்ளது.

 தேதி பாடம்
 06.04.2023மொழிப் பாடம்
10.04.2023ஆங்கிலம்
13.04.2023கணிதம்
15.04.2023விருப்ப மொழிப் பாடம்
17.04.2023அறிவியல்
20.04.2023சமூக அறிவியல்

மாணவர்கள் தேர்வுக்கு நன்கு தயாராகும் வகையில்,  முக்கிய பாடங்களுக்கு இடையே இடைவெளி கொடுக்கப்பட்டது .ஆங்கில பாடத்துக்கு 3 நாட்கள்  விடுமுறையும், கணித  பாடத்துக்கு 2 நாட்கள் விடுமுறையும், அறிவியல் பாடத்துக்கு 3 நாட்கள் விடுமுறையும், சமூக அறிவியல் பாடத்துக்கு 2 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியாகவும் தேதி குறித்த அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டது. அதன்படி, தேர்வு முடிவு மே 17ம் தேதி வெளியிடப்படும். தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு இரண்டு மாதத்துக்கும் தேர்வு முடிவுகளை வெளியிட அரசுத் தேர்வுகள் இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே,  8ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC/ NAC பெற்றவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு தேர்வுகள் இயக்கத்தால் நடத்தப்பெற்ற 10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 10ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் (SOP) ஆகியவை www.skiltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

First published:

Tags: 10th Exam, 12th exam, 12th Exam results