10 வகுப்பு மொழி பாடத்தில், தூத்துக்குடி மாவட்டம் சங்கரவித்யாலாயா பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் மொழிப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். மாநிலம் முழுவதும், மொழிப் பாடத்தில் ஒரே ஒரு மாணவர் மட்டும் 100% மதிப்பெண்கள் பெற்றிருப்பது அனைவரின் புருவங்களையும் உயர்த்தியுள்ளது. 12ம் வகுப்பு மொழித் தேர்வில் 47 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
2022 ஆண்டுக்கான இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்புச் சான்றிதழ் (SSLC) மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
12ம் வகுப்பில் மொத்தம் 8,06,277 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும்.
10ம் வகுப்பில் மொத்தம் 9,12,620 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 8,21,994மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 90.07ஆகும்.
பத்தாம் வகுப்பு பாடவாரியான தேர்ச்சி விகிதம்:
மொழிப்பாடம் | 94.84% |
ஆங்கிலம் | 96.18 % |
கணிதம் | 90.89 % |
அறிவியல் | 93.67 % |
சமூக அறிவியல் | 91.86 % |
100% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை
தமிழ் | 1 |
ஆங்கிலம் | 45 |
கணிதம் | 2186 |
அறிவியல் | 3841 |
சமூக அறிவியல் | 1009 |
தூத்துக்குடி மாவட்டம் சங்கரவித்யாலாயா பள்ளியில் பயிலும் மாணவர் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.
12ம் வகுப்பில் பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி விகிதம்:
12ம் வகுப்பு பாடப்பிரிவில், கணிதத்தில் 1858 பேரும், வேதியியல் பாடத்தில் 1500 பேரும், இயற்பியல் பாடப் பிரிவில் 634 பேரும் 100 % மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
பாடப் பிரிவுகள் | தேர்ச்சி விகிதம் | 100% மதிப்பெண்கள் பெற்றவர்கள் |
இயற்பியல் | 96.47% | 634 |
வேதியியல் | 97.96% | 1500 |
உயிரியல் | 96.89% | 1541 |
கணிதம் | 97.29% | 1858 |
தாவரவியல் | 95.34% | 47 |
விலங்குவியல் | 96.01% | 22 |
கணினி அறிவியல் | 99.39% | 3827 |
வணிகவியல் | 96.31% | 4634 |
கனக்குப் பதிவியல் | 93.76% | 4549 |
தேர்விற்கு வருகைபுரியாத மாணவர்களின் எண்ணிக்கை 31,034 (3.70%) ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.