ஹோம் /நியூஸ் /கல்வி /

தமிழகத்தில் வேகமாக குறைந்துவரும் தமிழ் வழியில் கல்வி பயில்வோர் எண்ணிக்கை!

தமிழகத்தில் வேகமாக குறைந்துவரும் தமிழ் வழியில் கல்வி பயில்வோர் எண்ணிக்கை!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழ்நாட்டில் தமிழ் மொழி கூட சரியான கவனிப்பை பெறவில்லை. 2010ல் 12ம் வகுப்பில் தமிழ் மொழி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 75% ஆக இருந்த நிலையில், தற்போது 55% ஆக குறைந்திருக்கிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழகத்தில் தமிழ் வழியில் கல்வி பயில்வோர் எண்ணிக்கை  குறைந்து வருவதாக இந்திய மொழிகளுக்கான உயர்மட்டக் குழுவின் தலைவர் சம்மு கிருஷ்ண சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

  புதிய தேசியக் கல்விக் கொள்கையின் படி, நாட்டின் பன்மொழித் தன்மையினையும், மொழியாற்றலையும் வளர்த்தெடுப்பது தொடர்பான பரிந்துரைகளை வழங்க இந்திய மொழிகளுக்கான உயர்மட்டக் குழுவை மத்தியக் கல்வி அமைச்சகம் அமைத்தது. கல்வியில் கிடைக்கும் இடத்தில் எல்லாம் இந்திய மொழியைக் கொண்டு வருவதற்கான பரிந்துரைகளை இந்தக்குழு மத்தியக்  கல்வி அமைச்சகத்துக்கு வழங்கி வருகிறது. ஆர் எஸ் எஸ் அமைப்புடன் தொடர்புடைய சம்ஸ்கிருத பாரதி என்ற அமைப்பின் நிறுவனரான சம்மு கிருஷ்ண சாஸ்திரி இந்த குழுவின் தலைவராக உள்ளார்.

  இந்நிலையில், நாட்டின் பன்மொழித் தன்மை குறித்து பிரபல ஆங்கில நாளிதழான 'தி இந்து' க்கு அவர் அளித்த பேட்டியில் இந்தியாவின் பன்மொழித் தன்மை குறித்து பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

  இதில், புதிய கல்விக் கொள்கையில் தாய் மொழி/வட்டார மொழி கற்பிக்கும் மொழியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், தமிழ்நாட்டில் பெரும்பான்மையினர் விருப்பத்தக்கதாக இருக்கும் தமிழ் மொழியே கற்பிக்கும் மொழியாகுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

  இதற்கு பதிலளித்த அவர், "தமிழைப் பற்றிய கட்டமைக்கப்பட்ட  பிம்பங்களை இது காட்டுகிறது. சிவாகாசி நெசவாளர்களின் பேச்சு மொழியாக சௌராஷ்டிரம் உள்ளது. கோயம்பத்தூரில் வாழும் கவுண்டர் சமூகத்தினரின் பேச்சு மொழியாக தெலுங்கு உள்ளது. கன்னடா, மலையாளம் பேசும் மக்கள் இங்கு அதிகம். புள்ளிவிவாரங்களின் படி, மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 30- 35% பேர் மாற்று மொழி பேசுபவர்களாக உள்ளனர்.

  சம்மு கிருஷ்ண சாஸ்திரி

  12 (அ) 13 வட்டார மொழிகளையும் தமிழ் கொண்டுள்ளது. ஆனால், ஏதோ சிறப்பு காரணத்திற்காக மட்டும்,  தமிழ் மொழி மட்டுமே உரிய கவனிப்பை தமிழ்நாட்டில் பெற்று வருவதாக தெரிவித்தார். எனவே, தற்போது, புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் பட்சத்தில், தமிழ் மொழியை மட்டும் பயிற்று மொழியாகக் கொண்டால், அவர்கள் அனைவரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று தெரிவித்தர்.

  இதையும் வாசிக்கதமிழ் நிகழ்ச்சிகள் நேரம் குறைப்பு... வானொலி மூலம் மத்திய அரசு இந்தியை திணிப்பது நியாயமற்றது- ராமதாஸ் 

  மேலும், பேசிய அவர், தமிழ்நாட்டில் தமிழ் மொழி கூட சரியான கவனிப்பை பெறவில்லை. 2010ல் 12ம் வகுப்பில் தமிழ் மொழி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 75% ஆக இருந்த நிலையில், தற்போது 55% ஆக குறைந்திருக்கிறது. அவர்களின், மொழிக் கொள்கையே இதற்கு முக்கிய காரணம்.  அவர்கள் தங்களின் மனநிலையை மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

  மேலும், இந்தி மொழி வளர்ச்சி குறித்து பேசிய அவர், " மற்ற மொழிகளைப் போல் இந்தி மொழியும் பரப்ப வேண்டும். நாட்டின் 50% மக்கள் இந்தி மொழி பேசுவதை சாதகமாக கொள்ள வேண்டும். அங்கில வழி கல்வி இருக்கும் இடத்தில் எல்லாம், இந்தி மொழியைக் கொண்டு வர வேண்டும். இந்தி மொழி மீதான வலுவான உணர்வும், துடிப்பும் நாட்டை இணைக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், புதிய கல்விக் கொள்கையின் படி, உயர்கல்வி பாடநெறிகள் அனைத்தையும் சம்ஸ்கிருத மொழியில் கொண்டு முயற்சிக்க  வேண்டும் என்றும் தெரிவித்தார்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Education, Tamil language