தேசிய கல்விக் கொள்கையின் மொழிபெயர்ப்பு: தமிழ் மொழி புறக்கணிப்பால் சர்ச்சை

புதிய கல்விக் கொள்கை

தேசிய கல்விக் கொள்கை பிராந்திய மொழிகளில்  மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

 • Share this:
  தேசிய கல்விக் கொள்கை பிராந்திய மொழிகளில்  மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

  புதிய தேசிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, 484 பக்கங்கள் கொண்ட வரைவை 2019 ஆம் ஆண்டு சமர்ப்பித்தது.  கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்த கல்விக் கொள்கையை அடிப்படையாக வைத்து 2020ஆம் ஆண்டில்  புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது.

  இதற்கு மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து, தற்போது நாடு முழுவதும்  புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது.

  ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு வெளியிடப்பட்ட நிலையில் மாநில மொழிகளிலும் புதிய கல்விக் கொள்கையை மொழிபெயர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

  இதையடுத்து, தற்போது பிராந்திய மொழிகளிலும் புதிய கல்விக் கொள்கை மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம் , மலையாளம், தெலுங்கு, கொங்கணி, காஷ்மீரி, நேபாளி, ஒடியா, போடோ, மராத்தி, பஞ்சாபி,  டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தாலி ஆகிய 17 மொழிகளில் புதிய தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்க்கப்பட்டு வெளியிட்டிப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

  புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருந்த மும்மொழி கொள்கை உள்ளிட்ட அம்சங்களுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு  நிலவும் நிலைவில், தற்போது  அதன் மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
  Published by:Murugesh M
  First published: