ஹோம் /நியூஸ் /கல்வி /

சென்னை ஐஐடியில் பிஎஸ்சி படிப்பு: தாட்கோ முக்கிய அறிவிப்பு

சென்னை ஐஐடியில் பிஎஸ்சி படிப்பு: தாட்கோ முக்கிய அறிவிப்பு

சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி

TAHDCO Data Science: மாணாக்கர்கள் தங்களது 12ம் வகுப்பு கல்வியில் மொத்த மதிப்பெண்ணில் 50% க்கு மேல் தேர்ச்சி பெற்றவராகவும் பத்தாம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் கணித பாடத்தில் 50% க்கு மேல் நேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை ஐஐடியில், ஜனவரி 2023 ஆம் ஆண்டிற்கான, இளங்கலை தரவு அறிவியல் (B.Sc., Data Science and application) பட்டப்படிப்பு வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் 8ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.  இத்திட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்கள் பயில்வதற்கான செலவினை தாட்கோ கல்விக்கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். அமிர்தஜோதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை ஐஐடி உலகிலேயே முதல் முறையாக இளங்கலை தரவு அறிவியலில் (B.Sc., Data Science and application) பட்டப்படிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. இதில் 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு (Diploma) முடித்த மாணவர்கள் அனைவரும் விண்ணப்பித்து நான்கு ஆண்டு பட்டப்படிப்பு படிக்கலாம். ஜனவரி 2023 ஆம் ஆண்டிற்கான வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்கள் சேர்ந்து படிப்பதற்கு  சென்னையில்  நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் (JEE) பங்கு பெறத் தேவையில்லை. அதற்கு மாறாக, சென்னை ஐஐடி மற்றும் தாட்கோ மூலம் அளிக்கப்படும் 4 வார பயிற்சியின் முடிவில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது.

மேலும் இத்திட்டத்தில் பயில அறிவியல், மனிதவியல் வணிகவியல் போன்ற அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் ஒவ்வொரு நிலையின் முடிவிலும் வெளியேறும் வழிகள் உள்ளன மற்றும் மாணாக்கர்களுக்கு ஒரு அடிப்படைச் சான்றிதழ், ஒன்று அல்லது இரண்டு டிப்ளமோக்கள், அல்லது பட்டப்படிப்புடன் வெளியேறலாம்.

இந்த பாடத்திட்டம் பலமுறை சேர்க்கை வெளியேறுதல் (Multiple Entry/Exit) முறையை பின்பற்றுகிறது

இத்திட்டத்தில் வகுப்புகள் இணையதளம் (Online) வழியாகவே நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் தேர்வுகள் நேரில் நடத்தப்படுகின்றன.

மாணவர்கள் ஒரே நேரத்தில் தங்களது விருப்ப பட்டப்படிப்பினை (Degree Course) படித்துக் கொண்டே ஐஐடி மெட்ராஸ் வழங்கும் Bachelor of Science in Data Science &  Applications பட்டப்படிப்பையும் படிக்கலாம். தற்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 12,500 க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

அடுத்த 5 ஆண்டுகளில் 11 மில்லியனுக்கும் அதிகமாக வேலைவாய்ப்புகள் இத்துறையில் உள்ளது. இத்திட்டத்தில் முறையாக 4 வருடம் Bachelor of Science in Data Science & Applications படித்து முடிக்கும் மாணக்கர்களுக்கு சென்னை ஐஐடி.யில் நேரடியாக படிப்பதற்கான Gate Exam எழுதுவதற்கான தகுதியாக ஏற்றுக் கொள்ளப்படும்.

மாணாக்கர்கள் தங்களது 12ம் வகுப்பு கல்வியில் மொத்த மதிப்பெண்ணில் 50% க்கு மேல் தேர்ச்சி பெற்றவராகவும் பத்தாம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் கணித பாடத்தில் 50% க்கு மேல் நேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். தேர்வு கட்டணம் ரூ. 1500/- ஆகும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணாக்கர்களுக்கு தாட்கோ மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

சென்னை ஐஐடி  மற்றும் தாட்கோ நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 4 வார பயிற்சியில் கலந்து கொண்டு, அவர்கள் தேர்ச்சி பெற்றால் மெட்ராஸ் ஐஐடி, வழங்கும் Bachelor of Science in (Data science Applications) பட்டப்படிப்பு சேர்க்கை பெறுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai IIT