Home /News /education /

100% வேலை உத்தரவாதம்.. மருத்துவத்துறை மென்பொருள் நிறுவனங்களில் பணிவாய்ப்பு : தாட்கோ முக்கிய அறிவிப்பு

100% வேலை உத்தரவாதம்.. மருத்துவத்துறை மென்பொருள் நிறுவனங்களில் பணிவாய்ப்பு : தாட்கோ முக்கிய அறிவிப்பு

தாட்கோ Medical Coding Training

தாட்கோ Medical Coding Training

TAHDCO Medical Coding Training : மாணவர்களுக்கு 100 சதவீதம் மருத்துவத் துறை மென்பொருள் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும் என்று தாட்கோ உத்தரவாதம் அளித்துள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai | Tamil Nadu
    வாழ்க்கை அறிவியல் (Life Science) பாட நெறியில்  இளங்கலை அறிவியல் (Bsc) முடித்த மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு இலவசமாக Medical Coding Training குறுகிய கால பயிற்சி திட்டத்தை தாட்கோ உருவாக்கியுள்ளது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு பல்வேறு பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முன்னதாக,  சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்ததுடன் இணைந்து,  4 வருடம் Bachelor of Science in Data Science & Applications என்ற  தொழில் பாதை திட்டத்தை தாட்கோ (TAHDCO) நிறுவனம் அறிவித்தது.

    அதே போன்று, தற்போது வாழ்க்கை அறிவியல் (Ute Science) முடித்த மாணவர்களை மருத்துவத் துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் பணியமர்த்தும் விதமாக Medial Coding Training என்ற இலவச குறுகிய கால பயிற்சி திட்டத்தை அறிவித்துள்ளது.

    அடிப்படைத் தகுதிகள்:

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் மற்றும் மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம் என்றும் இளங்கலை அறிவியல் (Life Sclence) பட்டப்படிப்பில் மொத்த மதிப்பெண்களில் 60 சதவீதம் பெற்றிருக்க வேண்டும் என்றும்  தாட்கோ தெரிவித்துளளது.  

    பயிற்சி காலம்:  

    தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மூலம் இணையதளம் வழியாக மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கான கட்டணத் தொகை ரூ.15,000/- தாட்கோ வழங்கும்.

    100% வேலை உறுதி:

    பயிற்சி முடிந்தவுடன் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு தேர்வு பெற்ற மாணக்கர்களுக்கு ISO (international Organization for Standardization) தரத்துடன் கூடிய சான்றிதழ் அளிக்கப்படும். மேலும், பயிற்சியில் தேர்ந்த மாணவர்களுக்கு  நேர்முக தேர்வின் மூலம் நூறு சதவீதம் மருத்துவத் துறை மென்பொருள் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும் என்றும் தாட்கோ உத்தரவாதம் அளித்துள்ளது

    வேலையில் சேர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு வீட்டிலிருந்த படியே அந்நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பணி மேற்கொள்ளலாம் என்றும் ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ12000/- முதல் ரூ.15,000/-வரை பெறலாம் பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000/- முதல் ரூ.70,000/-வரை பதவி உயர்வின் அடிப்படையில் குறுகிய காலத்தில் மாத ஊதியமாக பெறலாம் என்றும் தாட்கோ கூறியுள்ளது.

    இதையும் வாசிக்க: உயர் கல்வி மாணவர்களுக்கான உதவித் தொகை.. இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

    இத்திட்டத்தில் இணைய, www.tahdco.com என்ற தாட்கோ இணையதள முகவரியில் மாணவர்கள் பதிவு மேற்கொள்ளலாம்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Education, Jobs

    அடுத்த செய்தி