ஹோம் /நியூஸ் /கல்வி /

மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் இருக்க காரணம் என்ன? தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் இருக்க காரணம் என்ன? தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

நீட் தேர்வு

நீட் தேர்வு

NEET PG Counselling: மருத்துவ இடங்கள் கூட நிரப்பப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன? நீங்கள் எதிர்கால தலைமுறையுடன் மோதல் போக்கை கொண்டுள்ளீர்கள் - உச்ச நீதிமன்றம்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  எதிர்காலத்துடன் வீணாய் மோதாமல், 2021 மருத்துவ முதுநிலை படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வை உடனடியாக நடத்துமாறு இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  2021 கல்வியாண்டில் முதுநிலை  மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அகில இந்திய ஒதுக்கீடு, மாநில ஒதுக்கீடு திட்டத்திற்கான கலந்தாய்வு, ஜனவரி மாதம் தொடங்கியது. இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பிறகும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன. இதன் காரணமாக, நீட் தேர்வின் கட்ஆப் மதிப்பெண்ணில் 15 சதவீதம் குறைத்து, திருத்தப்பட்ட முடிவுகளை தேசிய தேர்வு வாரியம் வெளியிட்டது.

  இதன்பிறகு, அகில இந்திய ஒதுக்கீடு/ மாநில இடஒதுக்கீடு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக சிறப்பு கலந்தாய்வு கூட்டம் (Mop-Up Round Counselling) நடைபெற்றது. இதிலும், நிரப்பப்படாத இடங்களுக்கு, கடைசி வாய்ப்பாக  இறுதிகட்ட கலந்தாய்வு கூட்டம் (Stray Vacancy Counselling) நடைபெற்றது. இருப்பினும், 1456 இடங்கள் கடைசிவரை நிரப்பப்படவில்லை.

  இந்நிலையில், முதுநிலை மருத்துவ கலந்தாய்வில் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், இறுதியாக காலியாக உள்ள இடங்களை நிரப்பும் வகையில் சிறப்பு கலந்தாய்வு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று மருத்துவர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

  இந்த வழக்கை, நீதிபதிகள் எம்ஆர் ஷா மற்றும் அனிருதா போஸ் ஆகியோர் கொண்ட அமர்வு கடந்த புதன்கிழமை விசாரித்தது. அப்போது, கருத்து தெரிவித்த நீதிபதிகள், ’மருத்துவ இடங்கள் கூட நிரப்பப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன? நீங்கள் எதிர்கால தலைமுறையுடன் மோதல் போக்கை கொண்டுள்ளீர்கள். உடனடியாக, சிறப்பு கலந்தாய்வை நடத்தி இடங்கள் நிரப்பப்படக்  கூடாதா? என்று கேள்வி எழுப்பினர்.

  இந்நிலையில், இன்று தேசிய மருத்துவ ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ’2022 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கூட வெளியிடப்பட்டுள்ளன. அதற்கான, கலந்தாய்வு கூட்டம் விரைவில் தொடங்கயிருக்கிறது. ஒரே சமயம், இரண்டு கல்வியாண்டுக்கான கலந்தாய்வு கூட்டம் நடத்துவது சிக்கலை ஏற்படுத்தும்.

  ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் கலந்தாய்வில் சில இடங்கள் நிரப்பப்படாமல் தான் இருந்து வருகிறது. தற்போது காலியாக உள்ள 1,456 இடங்களில், 77% இடங்கள் மருத்துவ சிகிச்சை சாராத இடங்கள் தான் (Non- Clinical Seats). 1.5 ஆண்டுகளுக்கு முன்பாக நடத்தப்பட்ட தேர்வுக்கு, தற்போது சேர்க்கை நடத்துவது மருத்துவத் துறையின் மாண்பையும், பொது மக்களின் பாதுகாப்பையும் சமர்சம் செய்வதாவே அமையும்" என்று தெரிவித்தார்.

  அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மறு கிழமைக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக இன்று அறிவித்தனர்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Neet