ஹோம் /நியூஸ் /கல்வி /

ஏ.கே ராஜன் குழுவுக்கு தடை விதிக்க கோரிய மனு: தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஏ.கே ராஜன் குழுவுக்கு தடை விதிக்க கோரிய மனு: தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

A.K Rajan Committee: நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து கருத்தியல் பொது செல்வாக்கை குழுவின் அறிக்கை உருவாக்கலாம் - ஏ.கே ராஜன் உயர்மட்டக் குழு குறித்து சென்னை உயர்நீதிமன்றம்

 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழ்நாடு அரசு அமைத்த ஏ.கே ராஜன் தலைமையிலான குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை இந்திய உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

  முன்னதாக, கடந்தாண்டு ஜூன் மாதம் நீட் தேர்வின் மூலம் மருத்துவ சேர்க்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறித்து ஆராய நீதியரசர் (ஓய்வு) ஏ.கே ராஜன் தலைமையில் உயர்மட்டக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. இந்த குழு, சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு முறை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும் , அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை சரி செய்யும் வகையில் , இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து , அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் , அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து , அரசுக்குப் பரிந்துரைகளை அளித்திடும் என்று அறிவிக்கப்பட்டது.

  இதற்கிடையே, நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைத்ததை எதிர்த்து, தமிழ்நாடு பிஜேபி பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் வழக்கு தாக்கல் செய்திருந்தார். Modern Dental College and Research Centre vs. State of Madhya Pradesh மற்றும்  Christian Medical College Vs Union of India  உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டிய மனுதாரர், " மருத்துவம் போன்ற உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் எதனைப் பொறுத்தும் சட்டங்கள்  இயற்றுவதற்கு, நாடாளுமன்றம் தனிநிலை அதிகாரம் உடையது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசால் எடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

  இதையும் வாசிக்கநீட் தேர்வு: ஏ.கே ராஜன் குழு அறிக்கை உணர்த்துவது என்ன?

  இந்த வழக்கை  விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி தலைமையிலான இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, " மாணவர் சேர்க்கையில் ஏற்படும் பாதிப்புகளை ஆராய  அமைக்கப்பட்ட குழு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாடு என்று பொருள்படாது என்று தெரிவித்தது. மேலும், நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து கருத்தியல் பொது செல்வாக்கை குழுவின் அறிக்கை உருவாக்கலாம். அதன் மூலம் விளிம்பு நிலை மாணவர்கள் அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாற்று மாணவர் சேர்க்கை முறைகளை கொண்டு வருவதற்கான வாய்ப்பை உருவாக்கலாம்" என்று தெரிவித்தனர்.

  இந்த தீர்ப்பை எதிர்த்து, மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நேற்று, இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

  இதையும் வாசிக்க: அதிகரிக்கும் கல்வி ஏற்றத்தாழ்வுகள்! நீதியரசர் முருகேசன் ஆணையத்தின் பரிந்துரைகள் என்ன?

  இதற்கிடையே, தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு முந்தைய மற்றும் பிந்தைய  மருத்துவ மாணவர்கள் சேர்க்கைகளை ஆராய்ந்த ஏ.கே ராஜன் தலைமையிலான குழு, " நீட் தேர்வுக்கு பிந்தைய மாணவர் சேர்க்கையில்  சமூகம் மற்றும் பொருளாதார மிக்கோர் மட்டுமே தொடர்ந்து வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டு வருவதாகவும், நீட் தேர்வை அகற்றுவதற்கான சட்டரீதியான வழிகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.  இதன் அடிப்படையில், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதவை தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றியது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Neet, Neet Exam, Supreme court