உயர்கல்வி படிப்பிற்காக பாகிஸ்தான் செல்வதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியக் குழுவும், அகில இந்திய தொழிநுட்ப கல்வி குழுமமும் மாணவர்களுக்கு பரிந்துரைத்துள்ளன.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், " பாகிஸ்தானில் கல்வி பெற்ற மாணவர்கள் இந்தியாவில் மேற்படிப்பினைத் தொடரவும், வேலை வாய்ப்பினை பெறவும் தகுதியற்றவர்கள் என்பதனை அந்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் இந்திய பிரஜைகளுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் சுட்டிக் காட்டப்படுகிறது.
இருப்பினும், அந்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்று இந்தியாவுக்கு குடிபெயர்ந்து குடியுரிமை பெற்ற மாணவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அனுமதிக்கு பின் இந்தியாவில் பணி செய்ய தகுதியுடைவர்களாக கருதப்படுவர்" என்று தெரிவித்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.