அரியர் தேர்வு விவகாரம்: ’மாணவர் சமுதாயத்தை ஏமாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை’ - சட்டப்பேரவையில் அமைச்சர் கே.பி.அன்பழகன்..

அரியர் தேர்வு தொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் அரசுக்கு எந்த கடிதமும் எழுதவில்லை என சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அரியர் தேர்வு விவகாரம்: ’மாணவர் சமுதாயத்தை ஏமாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை’ - சட்டப்பேரவையில் அமைச்சர் கே.பி.அன்பழகன்..
அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • News18 Tamil
  • Last Updated: September 17, 2020, 11:19 AM IST
  • Share this:
அரியர் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் பயப்பட தேவையில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பேரவையில் பேசிய அமைச்சர், யூஜிசி, ஏஐசிடிஇ விதிமுறைகளுக்கு உட்பட்டே தமிழக உயர்கல்வித்துறை செயல்படுவதாக கூறினார். செமஸ்டர் இறுதி தேர்வு தவிர பிற தேர்வுக்கு, பணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள் என்று அவர் கூறினார். நீதிமன்ற உத்தரவை பின்பற்றி இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் படிக்க...அண்ணா பல்கலைக்கழகம் இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு


மேலும்  அரியர் தேர்வில் ஆல் பாஸ் என்ற தமிழக அரசின் அறிவிப்பு தொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ. மின்னஞ்சல் எதுவும் அனுப்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த விஷயத்தில் மாணவர் சமுதாயத்தை ஏமாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
First published: September 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading