Home /News /education /

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது: தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம்

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது: தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம்

மாதிரி படம்

மாதிரி படம்

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

    6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தப் படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கும் என தமிழக அரசு அறிவித்தது.

    அந்தவகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 11 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவர்களுள் 6 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே கல்லூரிகளை தேர்ந்தெடுத்தனர். மீதி இடங்கள் காலியாக உள்ளன. அவ்வாறு இடங்களை தேர்ந்தெடுத்த மாணவர்கள் அரசு கல்லூரிகள் மட்டுமல்லாமல், தனியார் கல்லூரிகளையும் தேர்ந்தெடுத்தனர்.

    7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவித்த போதும் அதற்கான அரசாணை வெளியாகாமல் இருந்தது. இதனை தொடர்ந்து தனியார் கல்லூரிகளுக்கு சேர சென்ற மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகங்கள் கல்வி கட்டணம் விடுதிக் கட்டணம் ஆகியவற்றை செலுத்தச் சொல்லி நிர்பந்திப்பதாக தகவல்கள் வெளியாகின.

    இதனையடுத்து தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளை தேர்ந்தெடுத்த மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து விரைவில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை ஏற்பதற்கான அரசாணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Reservation

    அடுத்த செய்தி