அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குறிப்பாக இளங்கலைப் பட்டப் படிப்பில் சேர மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளதைப் பற்றி சொல்கிறது இந்த தொகுப்பு..
தமிழ்நாடு முழுவதும் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு கடந்த மாதம் 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை விண்ணப்ப விநியோகம் நடைபெற்றது. மொத்தமுள்ள 1.20 லட்சம் இடங்களுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்துள்ளனர்.
கடந்த 17ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிட்டதைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 23ம் தேதி தொடங்கி வரும் 3ம் தேதி வரை நடைபெறுகிறது.
Also read: ஒரு நாள் விட்டு ஒரு நாள்... கல்லூரிகள் இயங்கப்போவது எப்படி?
இதன்படி திருச்சி பெரியார் ஈ.வே.ரா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15 பாடப் பிரிவுகளில் மொத்தமுள்ள 1,420 இளநிலைப் பட்டப்படிப்பில் சேர சுமார் 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சில பாடங்களில் சேர்க்கையே நிறைவு பெற்று விட்டது என்கிறார்
திருச்சி பெரியார் ஈ.வே.ரா அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்ப் பாடத்தில் சேர அதிகம் விண்ணப்பித்துள்ளனர். சுழற்சி 1 (ஷிப்ட் 1), 60, சுழற்சி 2ல் 60 என மொத்தம் 120 இடங்களுக்கு 2, 100 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கடந்த 1967ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் இளங்கலை தமிழ் பட்டப்படிப்பில் சேர அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளது இதுவே முதல்முறை என்கிறார்கள் பேராசிரியர்கள். கொரோனா கால பொருளாதார நெருக்கடி, கட்டணமில்லா கல்வி, உதவித் தொகை, வேலை வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் அரசுக் கல்லூரியில் சேர பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வழக்கத்தை விட அரசுக் கல்லூரிகளில் சேர மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது, வரவேற்கத் தக்கதாக உள்ளது. இந்த ஆர்வத்திற்கு ஏற்ப உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் எண்ணிக்கை, தரமும் தொடர வேண்டும் என்கிறார்கள் பெற்றோர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.