1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 13ஆம் தேதிக்குள் ஆண்டு இறுதி தேர்வை நடத்தி முடிக்கும் வகையில் அட்டவணை வெளியிட்டது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் வாட்டி வதைக்கும் என்பதால், மாணவர்கள் பள்ளிக்கு வருவது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில் “கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை விடுவது தொடர்பாக பரிசீலித்து முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இன்று 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தொடங்கி நடைபெறவுள்ளது. இதற்கிடையில், 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இடைவெளி விட்டு தேர்வு நடைபெற உள்ளது.
கோடை வெயிலில் மாணவர்களை தேர்வுக்கு மட்டும் பள்ளிக்கு வரச்சொல்லலாமே, மற்ற நாட்கள் அவர்களுக்கு விடுமுறை வழங்கினால் அவர்களின் உடல்நலன் காக்கப்படுமே என்று கல்வியாளர்கள், பெற்றோர் தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன. இது குறித்து ஆலோசனை நடத்திய பின்னர், தேர்வு நடைபெறும் அன்று மட்டும் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
Must Read : விழுப்புரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வு
இந்நிலையில், பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியத்தைப் பின்பற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்துவதற்கான கால அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாவதனால் மாணவர்களின் நலன் கருதியும், தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராவதற்கும் ஏதுவாக இனிவரும் நாட்களில் நடக்கவிருக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் அன்று, தேர்வு எழுதும் அரைநாள் மட்டும் பள்ளிக்கு வருவர்.
ஏற்கெனவே, அந்தந்த மாவட்டங்களில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை இறுதித் தேர்வுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் அறிவிக்கப்பட்ட நாட்களில் மட்டும் தேர்வுகள் நடைபெறும் பிற நாட்களில் வகுப்புகள் ஏதும் நடைபெறாது”. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: School education, School Holiday, School students, Summer