ஹோம் /நியூஸ் /கல்வி /

8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய உதவித்தொகை தேர்வு அறிவிப்பு

8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய உதவித்தொகை தேர்வு அறிவிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

National Merit cum Means Scholarship: விண்ணப்பங்களை வரும் 26 ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை தேர்வுகள் இயக்ககம் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடப்பு கல்வி ஆண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி அன்று நடைபெற உள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத் தேர்விற்கு NMMS விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

இத் திட்டத்தின் மூலம் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை வரும் 26 ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை http://dge1.tn.gov.in என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 50 ரூபாய் தேர்வு கட்டணத்துடன் பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கஜே.இ.இ. நுழைவுத் தேர்வு - தமிழக அரசின் கோரிக்கை ஏற்ற தேசிய தேர்வு முகமை!

மேலும் விவரங்களை http://dge1.tn.gov.in அறியலாம் எனவும் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

First published:

Tags: Scholarship