கலை & அறிவியல் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டிய மாணவர்கள் - ஒரே நாளில் குவிந்த 80 ஆயிரம் விண்ணப்பங்கள்

பொறியியல் படிப்புகளுக்கு 5 நாட்களில் 73,000 விண்ணப்பித்த நிலையில் கலை அறிவியல் படிப்புகளுக்கு 80,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

கலை & அறிவியல் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டிய மாணவர்கள் - ஒரே நாளில் குவிந்த 80 ஆயிரம் விண்ணப்பங்கள்
(கோப்புப் படம்)
  • Share this:
தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியிலான மாணவர் சேர்க்கை, நேற்று மாலை துவங்கியது. கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக ஒரே நாளில் 80,000 மாணவர்கள் பதிவு செய்தனர்.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள், பல்கலை உறுப்பு கல்லூரிகள் ஆகியவற்றில் 1,71,350 இடங்கள் உள்ளன. இதற்கு ஒரே நாளில் 80,000 மாணவர்கள் விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைனில்  விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இந்த மாதம் 31 வரை இருக்கிறது வரும் நாட்களிலும் அதிக மாணவர்கள் கலை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.

Also read... அரசியல் பிரபலங்கள் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல காரணம் என்ன? அமைச்சர் செல்லூர் ராஜு பிரத்யேக பேட்டி

பொறியியல் படிப்புகளுக்கு 5 நாட்களில் 73,000 விண்ணப்பித்த நிலையில் கலை அறிவியல் படிப்புகளுக்கு 80,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
First published: July 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading