• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • ஒரே நாளில் இரு தேர்வு: குழப்பத்தில் மாணவர்கள்!

ஒரே நாளில் இரு தேர்வு: குழப்பத்தில் மாணவர்கள்!

ஆசிரியர்கள்  மாதிரிப்படம்

ஆசிரியர்கள் மாதிரிப்படம்

ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் 8-ம் தேதி, பி.எட் படிப்புகளுக்கான தேர்வும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் நடைபெறும் அதே நாளில், பி.எட் தேர்வும் நடைபெற உள்ளதால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியாற்ற, டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரையும், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரையும் பாடம் நடத்த முடியும்.

இந்தாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு வரும் ஜூன் 8-ம் தேதியும், இரண்டாம் தாள் 9-ம் தேதியும் நடைபெறுகிறது. ஆனால் முதல் தாள் தேர்வு நடைபெறும் 8-ம் தேதி, பி.எட் படிப்புகளுக்கான தேர்வும் நடைபெற உள்ளது. பி.எட் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் முதல் தாள் எழுதலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரே நாளில் இரண்டு தேர்வுகளும் நடைபெற உள்ளதால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Also see... EXCLUSIVE : அரசு பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்

Also see... 




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: