Home /News /education /

நாட்டில் மாணவர்கள் தற்கொலை போக்கு அதிகரிப்பு; காரணங்கள் என்ன?

நாட்டில் மாணவர்கள் தற்கொலை போக்கு அதிகரிப்பு; காரணங்கள் என்ன?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கடந்த 25 ஆண்டில் இந்தியாவில் மட்டும் 1.70 லட்சம் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
கொரோனா தொற்றுக்குப் பிந்தைய காலங்களில் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

முன்னதாக,  மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம், 2021 வருட 'விபத்து உயிரிழப்புகள் மற்றும் இந்தியாவில் நிகழ்ந்த தற்கொலைகள்' தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டது. இதில், நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் 1,64,033 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதிகரித்து வரும் மாணவர்கள் தற்கொலை:

நாட்டின் மொத்த மக்கள்தொகையில் ஏறக்குறைய 54% பேர் 25 வயதிற்கும், 65% பேர் 35 வயதிற்கு குறைந்தவர்களாவர். போட்டி நிறைந்த கற்றல் முறை, பெற்றோரின் எதிர்பார்ப்பு, சமூக அழுத்தம் உள்ளிட்ட  பல்வேறு காரணங்களினால் இந்தியாவில் மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதை  பல்வேறு ஆய்வுகள் விளக்குகின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில்  மாணவர்கள் தற்கொலையில் இந்திய முதலிடத்தில் இருப்பதாக  உலக சுகாதார ஆய்வு தெரிவிக்கிறது.

இதையும் வாசிக்க:  4 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்கொலை எண்ணிக்கை உயர்வு: தமிழ்நாட்டில் சோகம்

கடந்த 25 ஆண்டில் இந்தியாவில் மட்டும் 1.70 லட்சம் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், இந்த தற்கொலை விகிதம் அதிகரித்து காணப்படுகின்றன. உதாரணமாக, 2016ல் மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கை 9,478 ஆக இருந்த நிலையில், 2017ல் 9,905 ஆகவும், 2018ல் 10,159 ஆகவும், 2019ல் 10,335 ஆகவும், 2020ல் 12,526 ஆகவும், 2021ல் (கடைசியாக வெளியான தரவு) 13,120 ஆகவும் அதிகரித்துள்ளன. அதாவது, கடந்த ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 50,000 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.



2021 வருட 'விபத்து உயிரிழப்புகள் மற்றும் இந்தியாவில் நிகழ்ந்த தற்கொலைகள்' அறிக்கையின் படி, கடந்தாண்டில், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 10,732 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், குடும்பப் பிரச்சனைகள் காரணமாக 3,233 பேரும், காதல் தொடர்பான விவகாரங்களால் 1495 பேரும், உடல்நலக் குறைபாடுகளால் 1408 பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட மாணவர்களில் பெரும்பாலானோர் மகாராஷ்டிரா (1,834),  மத்திய பிரதேசம் (1308), தமிழ்நாடு (1246) ஆகிய மாநிலங்களைச் சேர்நதவர்கள்

மேலும், தேர்வில் தோல்வி காரணமாக 1600 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தோல்வி விரக்தி காரணமாக கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 12,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

வேலைவாய்ப்பின்மை காரணமாக 2600 மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்ற்னர். கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்களின் தற்கொலைகள் எண்ணிக்கை 30%க்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில், மாணவர்களின் வாழ்க்கைச் சூழலலை மேம்படுத்தும் பிரத்தியக நடவடிக்கைகளை மத்திய/மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டும் என்று சமூக வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Published by:Salanraj R
First published:

Tags: Student Suicide

அடுத்த செய்தி