தற்போதைய காலகட்டத்தில் நீங்கள் எவ்வளவுதான் விழுந்து, விழுந்து படித்தாலும் தேர்வில் முழுமையான மதிப்பெண்களை அவ்வளவு எளிதில் பெற்றுவிட முடியாது. ஆனால், தேர்வில் வழங்கப்படும் மொத்த மதிப்பெண்களுக்கு கூடுதலாக, மதிப்பெண்களை மாணவர்கள் பெறும் விஷயத்தை நீங்கள் கேள்விப்பட்டது உண்டா? ஆம், பெங்களூரு மாநகரில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பிகாம் தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. தாங்கள் பெற்ற மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்களை விட கூடுதலாக இருப்பதை பார்த்து பல மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தப் பல்கலைக்கழகத்தில், டூரிசம் ஏஜென்சி மற்றும் டூர் ஆப்பரேட்டர் ஆர்கனைசேஷன் என்ற பாடப்பிரிவில் தேர்வு எழுதிய பிஏ அல்லது பி.காம். மாணவர்கள் இந்த அனுபவத்தை எதிர்கொண்டனர்.
தேர்வில் 70 க்கு 73 மதிப்பெண்களை பெற்றதாக கூறப்படும் மாணவர் ஒருவர் இதுகுறித்து கூறுகையில், “என் நண்பர்களில் சிலர் 89, 73, 75 போன்ற மதிப்பெண்களை பெற்றுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணியின் தரத்தை அம்பலப்படுத்துவதாக இந்த தேர்வு முடிவுகள் அமைந்துள்ளன’’ என்று தெரிவித்தார்.
இந்த பாடத்தை ஏறக்குறைய 500 மாணவர்கள் தேர்வு செய்து படித்தனர் என்றும், அவர்களுக்கான தேர்வு கடந்த 2021ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் 70 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது என்றும், இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : முதுகலை ஆசிரியர் தேர்வு கால அட்டவணை வெளியிடு
கடந்த 2015 - 2016 கல்வி ஆண்டு முதல், பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண் வழங்குதல் முறையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக தேர்வுகள் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில் 2015 - 16 கல்வி ஆண்டுக்கு பிறகு பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்கள், தேர்வில் 70 மதிப்பெண்களுக்கான கேள்விகளுக்கு மட்டுமே விடை அளிக்க வேண்டும். ஆனால், அவர்களில் பலர், கூடுதல் கேள்விகளுக்கு விடை அளித்திருந்தனர். இத்தகைய சூழலில் டிஜிட்டல் முறையில் விடை மதிப்பீடு நடைபெற்றபோது, மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்து பல்கலைக்கழக பணியாளர்கள் எவரும் கவனம் செலுத்தவில்லை. இதனால் பல்கலைக்கழகத்தில் நிலவிய அசட்டையான போக்கு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Also Read : பட்ஜெட் 2022: தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியம்சங்கள்!!
பெங்களூரு பல்கலைக்கழகத்தின் விடை திருத்த குழுவின் பதிவாளரும், பேராசிரியருமான ஜே.டி. தேவராஜ் இதுகுறித்து கூறுகையில், “தேர்வு முடிவுகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டுள்ளன. புதிய மற்றும் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். ஏறக்குறைய 15 மாணவர்கள் 70க்கும் மேற்பட்ட மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இது டிஜிட்டல் முறையிலான திருத்தப் பணி என்பதால், மதிப்பெண்கள் குறித்து பணியாளர்கள் கவனிக்கத் தவறி விட்டனர். இந்நிலையில் மதிப்பெண்கள் திருத்தப்பட்டு, புதிய முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்’’ என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bengaluru, Exam, Exam results, Students, University