முகப்பு /செய்தி /கல்வி / நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் சென்னை பல்கலைக்கழகம் ஒப்பந்தம்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் சென்னை பல்கலைக்கழகம் ஒப்பந்தம்

சென்னை பல்கலைக்கழகம்

சென்னை பல்கலைக்கழகம்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலும் தமிழக மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது - உயர்கல்வி அமைச்சர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

Student Exchange Program: ஆஸ்திரேலியா மெல்போர்ன் பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகம் இடையே உயர்கல்வி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி முன்னிலையில் சென்னை பல்கலைக்கழகம் மெல்போன் பல்கலைக்கழகம் இடையே ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.

இது குறித்து செய்திகளிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலும் தமிழக மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு மாணவர்களும் சென்னை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கஉயர்கல்வி படிப்பு: கல்விக்கடன் பற்றித் தெரிந்து கொள்வோம்

இது போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வரும் நாட்களில் பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களோடு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

First published:

Tags: Madras University, Melbourne