• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • கடந்த 2 ஆண்டுகளை விட இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவா?

கடந்த 2 ஆண்டுகளை விட இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவா?

மாதிரி படம்

மாதிரி படம்

கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் கூடுதலாக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மொத்தம் உள்ள 1,51,870 இடங்களில் 95,069 இடங்கள் நிரம்பியிருக்கின்றன. 56,801 இடங்கள் காலியாக உள்ளன.

  • Share this:
    நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24 வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 7ம் தேதியும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த வகையில் இந்த ஆண்டு 140 பொறியியல் கல்லூரிகளில் உள்ள  1,51,870 இடங்களில் 96,069 மாணவர்கள் பொறியியல் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

    கடந்த 2019ஆம் ஆண்டு 83,396 பேரும் கடந்த ஆண்டு 78,682 பேரும், இந்த ஆண்டு 95,069 மாணவர்களும் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். செம்டம்பர் மாதம் தொடங்கிய கலந்தாய்வு தற்போது முடிவடைந்துள்ளது. கடந்த ஆ்ண்டை விட நடப்பாண்டில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.

    அந்த வகையில், 16 பொறியியல் கல்லூரியில் 100 சதவீதம் இடங்களும் நிரம்பி உள்ளது. ஆனால் கடந்தாண்டு 13 கல்லூரிகளில் மட்டுமே அனைத்து இடங்களும் நிரம்பியது. நடப்பாண்டில் 85 கல்லூரிகளில் 90 சதவீதம் இடங்களும், 113 கல்லூரிகளில் 80 சதவீதத்திற்கு மேல் இடங்கள் நிரம்பி உள்ளது. 50 சதவீதத்திற்கு மேல் 218 கல்லூரியில் இடங்கள் நிரம்பி உள்ளது. 65 கல்லூரிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவாக இடங்கள் நிரம்பி உள்ளன.

    கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவினை மாணவர்கள் அதிகளவில் தேர்வு செய்துள்ளனர். அடுத்ததாக மெக்கானிக்கல் பாடப்பிரிவினையும், சிவில் பாடப்பிரிவினையும் தேர்வுச் செய்துள்ளனர்.

    பொதுப்பிரிவு கலந்தாய்வு முடிவடைந்ததைத் தொடர்ந்து கடந்த 22ஆம் தேதி துணைக் கலந்தாய்வு நடைபெற்றது இதற்கு 9,463 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: