• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • அரசினர் மகளிர் ஐ.டி.ஐ-யில் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை

அரசினர் மகளிர் ஐ.டி.ஐ-யில் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை

ஐ.டி.ஐ-யில் 2021 ஆண்டுக்கான மாணவர் நேரடி சேர்க்கை

ஐ.டி.ஐ-யில் 2021 ஆண்டுக்கான மாணவர் நேரடி சேர்க்கை

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்தவுடன்  தொழிற்பழகுநர் பயிற்சியும் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்புள்ளதால் மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். 

  • Share this:
    சென்னை கிண்டி அரசினர் மகளிர் ஐ.ஐ.டியில் 30.10.2021 வரை மாணவர் நேரடி சேர்க்கை பொறியியல் அல்லாத கீழ்காணும் தொழிற்பிரிவுகளில் நடைபெற்று வருகிறது. இதற்கான அறிவிப்பினை கிண்டி அரசினர் மகளிர் ஐ.ஐ.டி வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது பின்வருமாறு,

    சென்னை கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2021 ஆண்டுக்கான மாணவர் நேரடி சேர்க்கை பொறியியல் அல்லாத கீழ்காணும் தொழிற்பிரிவுகளில் நடைபெற்று வருகிறது. 

    அதனால் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவிகள் உடனடியாக தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறார்கள். மகளிருக்கு வயது வரம்பு இல்லை.

    கல்விதகுதி : 8> 10- ம் வகுப்பு தேர்ச்சி .

    ஆவணங்கள் :

    • மாற்றுச்சான்றிதழ்.

    • மதிப்பெண்சான்றிதழ்.

    • புகைப்படம் மற்றும் ஆதார்அட்டை நகல்.


    கிண்டி மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ளதொழிற்பிரிவுகள் :

    • • Computer Aided  Embroidery and Designing,

    • • Sewing Technology,

    • • Surface Ornamentation techniques (Embroidery)


    தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்தவுடன்  தொழிற்பழகுநர் பயிற்சியும் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்புள்ளதால் மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். என சென்னை கிண்டி அரசினர் மகளிர் ஐ.ஐ.டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: