அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்கியது

அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்கியது
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: July 23, 2018, 1:09 PM IST
  • Share this:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு சட்டக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்கியது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, மதுரை அரசு சட்டக்கல்லூரி, திருச்சி அரசு சட்டக்கல்லூரி, கோயம்புத்தூர் அரசு சட்டக்கல்லூரி, திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி, செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி உள்ளிட்ட 11 அரசு சட்டக்கல்லூரிகளில் 1411 இடங்கள் உள்ளன.

இவற்றில் 5 ஆண்டு பி.ஏ.எல்.எல்.பி. சட்டப்படிப்பில் சேர்ந்து படிப்பதற்காக 644 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதனை பரிசீலனை செய்ததில் 302 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தரவரிசை பட்டியல் கடந்த 16–ந் தேதி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து முதல் நாள் கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்கியது.


துணை வேந்தர் சாஸ்திரி முதல் 5-ம் இடம் பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கைகான ஆணையை வழங்கினார். மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடர்ந்து 4 நாட்கள் நடத்தப்படுகிறது. இதில் பொதுப்பிரிவினருக்காக நடத்தப்படும் முதல் நாள் கலந்தாய்வில் 404 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிகிறது. இதனை தொடர்ந்து நாளை (செவ்வாய்கிழமை) எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கும், புதன்கிழமை மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) மாணவர்களுக்கும், வரும் 23–ந் தேதி இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

4 நாட்களுக்கும் சேர்த்து மொத்தம் 1411 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கான 6% இடஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் தேதி பின்னர் முறையாக அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: July 23, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading