• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • அரசு கல்லூரிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை

அரசு கல்லூரிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

முதலாம் ஆண்டு படிப்பில் சேர, 1.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

  • Share this:
    தமிழகத்தில் இன்று முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, அந்தந்த கல்லுாரிகள் வழியே நடத்தப்படுகிறது. முன்னதாக கல்லுாரி கல்வி இயக்குனரகம் சார்பில், ஆன்லைனில் விண்ணப்ப பதிவு மேற்கொள்ளப்பட்டது.

    தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு படிப்பில் சேர, 1.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, கடந்த வாரம் தரவரிசை பட்டியல் வெளியானது.

    அதனைத் தொடர்ந்து, இன்று முதல், அந்தந்த கல்லுாரிகளில் கவுன்சிலிங் நடத்தி, மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது. மாணவர்களை சேர்ப்பதற்கு முன்னர், அவர்கள் சமர்ப்பித்த சான்றிதழ்களின் உண்மை தன்மையை, அரசு தேர்வுத்துறை வழியே சரிபார்க்க வேண்டும். அசல் சான்றிதழ்களையும் சரிபார்த்த பின்னர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும் என, கல்லுாரி முதல்வர்களுக்கு உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், முதுநிலை படிப்பு குறித்து, கல்லுாரி கல்வி இயக்குனர் பூர்ணசந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், முதுநிலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், இன்று முதல், www.tngasapg.org, www.tngasapg.in என்ற இணையதளங்கள் வழியே விண்ணப்பிக்கலாம். வரும் 1ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

    Must Read : தமிழகத்தில் தியேட்டர்கள், பூங்காக்கள் இன்று முதல் திறப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி

    ஒரு கல்லுாரிக்கு பதிவு கட்டணமாக 2 ரூபாயும், விண்ணப்ப கட்டணமாக 58 ரூபாயும் செலுத்த வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், பதிவு கட்டணம் மட்டும், 2 ரூபாய் செலுத்த வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கூடுதல் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்களுக்கு, 044 2826 0098 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: