பள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் : மத்திய பள்ளி கல்வித்துறை

பள்ளிகளை மீண்டும் எப்போது திறப்பது என்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் மத்திய பள்ளிகள் கல்வித்துறை செயலாளர் அனிதா கர்வால் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் : மத்திய பள்ளி கல்வித்துறை
கோப்புப் படம்
  • Share this:
மத்திய பள்ளி கல்வித்துறை செயலாளர் அனிதா கர்வால் நிகழ்ச்சி ஒன்றில் காணொளி காட்சி மூலம் பங்கேற்றபோது, பள்ளிகள் திறப்பில் மத்திய அரசு தலையிடாது என்றாலும், பள்ளிகளில் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய தனிமனித இடைவெளி போன்றவை குறித்து மத்திய அரசு விதிமுறைகள் வகுத்துள்ளதாக தெரிவித்தார்.

ஆன்லைன் வகுப்புகளைச் சாடிய அனிதா கர்வால், ஒரு குறிப்பிட்ட சாதனத்தின் முன்பு சுமார் 8 மணி நேரம் பள்ளி குழந்தைகள் அமர்ந்தே இருப்பதால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், இதற்காகவும் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் டிஜிட்டல் வகுப்பறைகளுக்கு என புதிய சாதனத்தை உருவாக்கும் முயற்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை ஈடுபட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.


மேலும் படிக்க...

உலகளவில் 68 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

 

First published: June 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading