Home /News /education /

அரியர் தேர்வை ரத்துசெய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக்குழு திட்டவட்டம்..

அரியர் தேர்வை ரத்துசெய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக்குழு திட்டவட்டம்..

Youtube Video

அரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என, சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்த நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழக மானியக்குழு தரப்பில், அரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், தேர்வுகளை நடத்த பல்வேறு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இறுதிப்பருவ தேர்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த வழக்குகளை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகவும், இறுதிப்பருவ மாணவர்களை, முந்தைய தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அடைய செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

     

    தேர்வுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை வைக்கலாம் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai High court, Exam results, Students, University

    அடுத்த செய்தி