10,11,12 வகுப்பு பொதுத்தேர்வு பணிகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது - அரசுத் தேர்வுத்துறை அதிரடி

10,11,12 வகுப்பு பொதுத்தேர்வு பணிகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது - அரசுத் தேர்வுத்துறை அதிரடி
  • News18
  • Last Updated: February 12, 2020, 5:13 PM IST
  • Share this:
10,11,12 -ம் வகுப்பு பொதுத்தேர்வின் முக்கியப் பணிகளில், தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது என, அரசுத் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10,11,12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வரும் மார்ச் 2-ம் தேதியிலிருந்து ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சுமார் 20 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர்.

இந்நிலையில் தனியார் பள்ளி தேர்வு மையங்களுக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்களையோ அல்லது அரசுப் பள்ளிகளின் மூத்த ஆசிரியர்களையோ தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்ய வேண்டுமென்றும் தேர்வுத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.


தேவைப்படும் இடங்களில் மட்டும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை, துறை அலுவலராக நியமனம் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு தேர்வு மையத்திற்கு நியமிக்கப்படும் முதன்மைக் கண்காணிப்பாளரும், துறை அலுவலர்களும் வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் பணியாற்றிய தனியார் பள்ளி ஆசிரியர்கள், காப்பி அடிப்பது உள்ளிட்ட தவறான செயல்களுக்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Also see...
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading