சமூக நீதியை பா.ஜ.க நீக்கத் துடிக்கிறது! சி.பி.எஸ்.சி கட்டண உயர்வுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சி.பி.எஸ்.இ. வாரியத்தின் திருத்தப்பட்ட தேர்வுக்கட்டணத்தின்படி, எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் இனிமேல் 5 பாடங்களுக்கு ரூ.1,200 கட்டணம் செலுத்த வேண்டும்.

சமூக நீதியை பா.ஜ.க நீக்கத் துடிக்கிறது! சி.பி.எஸ்.சி கட்டண உயர்வுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
மு.க.ஸ்டாலின்
  • News18
  • Last Updated: August 12, 2019, 4:32 PM IST
  • Share this:
சி.பி.எஸ்.சி பள்ளியில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கான பள்ளிக் கட்டணத்தை உயர்த்தியதைத் திரும்பப் பெறவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. தேர்வு முறையில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 9-ம் வகுப்பு படிக்கும் போதே பதிவு செய்ய வேண்டும், அதே போல 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 11-ம் வகுப்பிலேயே பதிவு செய்ய வேண்டும்.

மாதிரிப் படம்கடந்த வாரம் மாற்றம் செய்யப்பட்ட தேர்வுக் கட்டண விவரங்களை சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ. வாரியத்தின் திருத்தப்பட்ட தேர்வுக்கட்டணத்தின்படி, எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் இனிமேல் 5 பாடங்களுக்கு ரூ.1,200 கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு முன் அவர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தினர். ஏறக்குறைய 24 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவினர் இதற்கு முன் ரூ.750 கட்டணம் செலுத்திய நிலையில் இனிமேல் ரூ.1500 கட்டணம் செலுத்த வேண்டும். பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை 24 மடங்கு உயர்த்தியிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்தநிலையில், கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ’CBSE தேர்வுக் கட்டணத்தை SC/ST மாணவர்களுக்கு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது!

#NEET, #NEXT, #neweducationpolicy வழியில் தேர்வு கட்டணத்தை உயர்த்தி சமூகநீதியை நீக்கத் துடிக்கும் பா.ஜ.க அரசின் போக்கை மக்கள் பொறுத்து கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்து உடனடியாக திரும்ப பெற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:
First published: August 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading