தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
தமிழக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை tnresults.nic.in என்ற இணைய முகவரியில் காண முடியும். தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை அரசுத் தேர்வு இயக்குநரகம் நடத்தியது.
2019-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி நிறைவடைந்தது.
இந்நிலையில், தேர்வு முடிவுகளை அரசுத்தேர்வுத்துறை இன்று வெளியிட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக 95.2 சதவிகித மாணவ- மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 93.3 சதவிகித மாணவர்களும், 97 சதவிகித மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்திலும் முதலிடம் பிடித்துள்ளது.
திருப்பூர் 98.53%, ராமநாதபுரம் 98.48%, நாமக்கல் 98.45% ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடம் பிடித்துள்ளது.
மாணவர்கள், மாணவியர், சிறப்புத்தேர்வர்கள் என்று ஒட்டுமொத்தமாக 9,37,859 பேர் தேர்வெழுதிய நிலையில், 8,92,521 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
45,338 பேர் தேர்ச்சி பெறவில்லை. அவர்களுக்காக ஜூன் மாதத்தில் 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடக்க உள்ளது.
இதற்காக, மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளி வழியாக விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்து தேர்வு எழுதலாம்.
தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?
1. tnresults.nic.in என்ற இணையதள பக்கத்துச் செல்லவும்.
2. TN SSLC Result 2019, TamilNadu Result 2019 எனத் தேர்வு செய்யவும்.
3. தேர்வு பதிவு எண்ணை பதிவிடவும்.
4. பிறந்த தேதி பதிவிடவும்.
5. தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். தேவைப்பட்டால் பதிவிறக்கமும் செய்துகொள்ள முடியும்.
கல்வி தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.