முகப்பு /செய்தி /கல்வி / SSLC Result: 10ம் வகுப்பு தேர்வில் கடந்த ஆண்டுகளை விட தேர்ச்சி விகிதம் குறைவு

SSLC Result: 10ம் வகுப்பு தேர்வில் கடந்த ஆண்டுகளை விட தேர்ச்சி விகிதம் குறைவு

தேர்வு முடிவுகள்

தேர்வு முடிவுகள்

கடந்த 2018ல் 94.5%, 2019ல் 95.2%, 2020 மற்றும் 2021ல் 100%(கொரோனா காரணமாக அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்) 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தனர். தற்போது 90.7 சதவீதமாக இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடந்த 4 ஆண்டுகளை விட பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த  ப்ளஸ் 2 மற்றும்  பத்தாம் வகுப்பு S.S.L.C பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  இன்று  அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிட்டார்.  12ம் வகுப்பில் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10ம் வகுப்பில் 90.7 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சியை பொறுத்தவரை கடந்த 4 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது தெரியவருகிறது. கடந்த 2018ல் 94.5%, 2019ல் 95.2%, 2020 மற்றும் 2021ல் 100%(கொரோனா காரணமாக அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்) தேர்ச்சி பெற்றிருந்தனர். தற்போது 90.7 சதவீதமாக இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.  9,12,620 பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  65 மாணாக்கர்கள் 495 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: Exam Results: 12ம் வகுப்பில் 93.76%, 10ம் வகுப்பில் 90.07% மாணவர்கள் தேர்ச்சி

அதேவேளையில் 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக 100 சதவீதம் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இதை தவிர்த்து பார்த்தால் 2018ல் 91.1%,  2019ல் 91.3%, 2020ல் 92.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு முந்தைய ஆண்டுகளை விட அதிகமாக, 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  656 மாணவர்கள் 591 மதிப்பெண்களுக்கு மேலாக எடுத்துள்ளனர்.

First published:

Tags: 10th Exam Result, 12th Exam results