ஹோம் /நியூஸ் /கல்வி /

10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோக தேதி அறிவிப்பு

10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோக தேதி அறிவிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil, India

  10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் வரும் வெள்ளிக்கிழமை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

  தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மே 6ம் தேதி தொடங்கி மே 30ம் தேதி முடிவடைந்தது. ஜூன் 20ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, மாணவர்கள் உயர்கல்வியில் சேரும் விதமாக தற்காலிக மதிப்பெண்ச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  மேலும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்குமான தனித்தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

  Also Read : பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: அமைச்சர் பொன்முடி

  இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வினை  எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் வரும்  வரும் வெள்ளிக்கிழமை  (14.10.2022) அன்று காலை 10 மணி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும் என்றும், தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: 10th Exam, 10th Exam Result