10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பெயர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராமவர்மா அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,"ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் 14.12.2022 முதல் 23.12.2022 வரையிலான நாட்களில் தங்களது பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களது விவரங்களையும் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து, தேர்வுக் கட்டணத்திணையும் இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர், இந்த பணிக்கான கால அளவு 28.12.2022 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
தற்போது, மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் நாளை (17.02.2023) பிற்பகல் முதல் www.dge1.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று தங்கள் பள்ளிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தங்கள் பள்ளி மாணாக்கர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.