CPO Paper I தேர்வு - மாதிரி விடைகளை வெளியிட்டது SSC தேர்வாணையம்!

CPO Paper I தேர்வு - மாதிரி விடைகளை வெளியிட்டது SSC தேர்வாணையம்!

கோப்புப் படம்

மத்திய ஆயுதக் காவல் படை உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான தற்காலிக விடைகளை SSC வெளியிட்டுள்ளது.

  • Share this:
மத்திய ஆயுதப்படை துணை ஆய்வாளர், டெல்லி காவல்துறையினர் துணை ஆய்வாளர் உள்ளிட்ட 1564 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் SSC வெளியிட்டது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த காலிப்பணியிடங்களுக்கான ஆன்லைன் கம்ப்யூட்டர் தேர்வு முதல் தாள் பல்வேறு மையங்களில் நவம்பர் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற்றது. 

இந்நிலையில், இந்த தேர்வுக்கான மாதிரி விடைகளை SSC  தற்போது வெளியிட்டுள்ளது. அதனை எஸ்.எஸ்.இ இணையதளத்தில் தேர்வர்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேகம் இருக்கும் விடைகளை எஸ்.எஸ்.இ இணையதளம் மூலமாக தேர்வர்கள் முறையிடலாம் என்றும், தலா ஒரு விடைக்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் எஸ்.எஸ்.இ கூறியுள்ளது. 

ரஜினி கேட்டுக் கொண்டால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டி.. தேர்தல் பிரசாரத்தில் கமல் அதிரடி அறிவிப்பு..

வரும் 24ம் தேதிக்குள் சந்தேகம் இருக்கும் விடைகளை தேர்வர்கள் முறையிடலாம் என அறிவித்துள்ள SSC, கொடுக்கப்பட்ட தேதிக்கு பின்னர் அனுப்பப்படும் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படாது என கூறியுள்ளது. https://ssc.nic.in/ChallengeSystem/ChallengeHomescreen என்ற இணையதளம் வழியாக தேர்வர்கள் தங்கள் முறையீட்டை அனுப்பலாம். தேர்வர்கள் தாங்கள் அனுப்பும் முறையீட்டு தாளை பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: