2021 ஒருங்கிணைந்த பட்டதாரி (நிலை -1) தேர்வுக்கான மின்னணு அனுமதிச் சீட்டினை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் பணியாளர் ஆணையத்தின்
ssc.nic.in என்ற இணையதள முகவரியில் சென்று பாதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
முன்னதாக, மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளில் பணி நியமனத்திற்கு பணியாளர் தேர்வாணையம் ‘ஒருங்கிணைந்த பட்டதாரி (நிலை -1) ’ குறித்த அறிவிக்கையை 23.12.2021 அன்று வெளியிட்டது.
வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், பதவிகளின் விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டது.
ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான
ssc.nic.in என்ற முகவரியில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி 23.01.2022 (இரவு 23:00 மணி). ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி தேதி 25.01.2022 (இரவு 23:00 மணி) ஆகும் .

மாதிரிப்படம்
நாடு முழுவதும் ஏப்ரல் 11ம் தேதி முதல் 21ம் தேதி வரை கணினி வழியில் தேர்வு நடத்தப்படும். மின்னணு அனுமதிச் சீட்டு தொடர்பான தகவல், விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்பட்டுள்ளது.
மின்னணு அனுமதி சான்றிதழ் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள அடையாள அட்டைகளின் அசல் ஆகியவை இல்லாமல் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அனைத்து விண்ணப்பதாரர்களும் மின்னணு அனுமதி சான்றிதழை கட்டாயம் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தடைசெய்யப்பட்ட பொருட்களான கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், துண்டு சீட்டுகள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்கள் (கைபேசிகள், புளூடூத் கருவிகள், ஹெட்போன், எழுதுகோல்/பொத்தான்/உளவு புகைப்பட கருவிகள், ஸ்கேனர், கால்குலேட்டர், சேமிப்பு கருவிகள் மற்றும் பல) ஆகியவற்றுக்கு தேர்வு அறைக்குள் அனுமதி இல்லை. இவற்றில் ஏதாவது தேர்வு அறைக்குள் தேர்வரிடம் இருந்து கண்டறியப்பட்டால், அவருக்கான தேர்வு அனுமதி ரத்து செய்யப்படுவதோடு, சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும். மூன்று முதல் ஏழு வருடங்கள் வரை தேர்வெழுதவும் அனுமதி மறுக்கப்படும். எனவே, தடைசெய்யப்பட்ட பொருட்களை தேர்வு மையத்திற்குள் கொண்டு வர வேண்டாம் என்று தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

SSC Exam tentative Calendar
ஒருங்கிணைந்த மேல்நிலை கல்வி (10 +2) அளவிலான தேர்வு:
முன்னதாக, 2021 ஒருங்கிணைந்த மேல்நிலை கல்வி (10 +2) அளவிலான தேர்வுக்கு அறிவிப்பை மத்தியப் பணியாளர் தேர்வு ஆணையம் 01-02-2022 அன்று வெளியிட்டது. ஆன்லைனில் மூலம் 07-03-2022 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2022, மே மாதம் பகுதி I நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலவகைப் பணி (தொழில்நுட்பம் அல்லாத) ஊழியர்:
அதேபோன்று, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / அமைப்புகளில் பணி நியமனத்திற்கு பணியாளர் தேர்வாணையம் ‘பலவகைப் பணி (தொழில்நுட்பம் அல்லாத) ஊழியர், தேர்வு 2021’ குறித்த அறிவிக்கையை 22.03.2022 அன்று வெளியிட்டது.
விண்ணப்பதாரர்கள் இந்த ஆணையத்தின் ssc.nic.in என்ற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி
30.04.2022 (இரவு 23:00 மணி) ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி தேதி 02.05.2022 (இரவு 23:00 மணி).
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.