• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில பேச்சுத் திறனை வளர்க்க சிறப்பு பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில பேச்சுத் திறனை வளர்க்க சிறப்பு பயிற்சி

மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில பேச்சுத் திறனை வளர்க்க சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கான பிரத்யேக பயிற்சி ஏடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. 

    ஆங்கில மோகத்தால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதை தடுக்கும் நோக்கில் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறனை வளர்க்க இந்த பயிற்சி ஏடு தயாரிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக ஒரு பயிற்சி ஏடும்,  முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 4 பயிற்சி ஏடுகளும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொண்டு மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சில அறிவுறுத்தல்களையும் பள்ளிக்கல்வித் துறை வழங்கியுள்ளது.

    அதோடு ஆட்சியர், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் உரிய அறிவுறைகள் வழங்கி பயிற்சி சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்யவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: