அயல்நாட்டு கல்வி 6: வைன் மேனேஜ்மென்ட் முதல் ஃபோட்டோகிராஃபி வரை... பிரான்ஸ் பெஸ்ட்!

#StudyAbroad உலகளவில் எந்தப் பாடத்தை எடுத்துக்கொண்டாலும் அதற்குண்டான டாப் பல்கலைக்கழகங்கள் பிரான்ஸ் நாட்டில்தான் உள்ளன.

அயல்நாட்டு கல்வி 6: வைன் மேனேஜ்மென்ட் முதல் ஃபோட்டோகிராஃபி வரை... பிரான்ஸ் பெஸ்ட்!
பிரான்ஸ் கல்வி
  • News18
  • Last Updated: May 11, 2019, 7:04 PM IST
  • Share this:
பிரான்ஸ் நாட்டுக் கல்வி குறித்தும் அதற்கான வரவேற்புகள் குறித்தும் இத்தொடரில் நம்மிடையே விளக்குகிறார் வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர் ஸ்ரீநிவாஸ் சம்பந்தம்.

ஸ்ரீநிவாஸ் பேசுகையில், “பிரான்ஸ் நாட்டில் எந்தப் பல்கலைக்கழகமானலும் அனைத்துப் பாடப்பிரிவுகளும் புதுமையானதாக இருக்கும். வெறும் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், டெக்னாலஜி, எலெக்ட்ரானிக் என பேருக்கு ஒரு ஜெனரிக் படிப்பு என எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் இருக்காது.

பி.எஸ்.எல் ஆய்வுப் பல்கலைக்கழகம்.ஒரு துறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் எந்த அம்சம் வளரும் என்பதைக் கணித்து அதற்குத்தகுந்த பாடத்திட்டங்களை மட்டும்தான் பிரான்ஸ் பல்கலைக்கழகங்கள் கற்றுத் தருகின்றன. உதாரணமாக, பொறியியல் துறையைப் பொறுத்தவரையில் எனர்ஜிட்டிக்ஸ் அண்ட் ப்ரோபோஷன் (Master of Engineering in Energetics and Propulsion) என்னும் முதுகலைப் பொறியியல் படிப்பு, மிகுந்த வரபேற்பும் வாய்ப்புகளும் நிறைந்த படிப்பாகவே உள்ளது.

ஆட்டோமேட்டிவ், ஏரோஸ்பேஸ், கப்பல் என எந்தவொரு வாகனத்தின் வேகம் தொடர்பான கல்வியையும் Energetics and Propulsion படிப்பு வழங்குகிறது. பொறியியல் கல்வியில் ஆர்வம் கொண்ட இந்திய மாணவர்களும் இந்தப் பாடப்பிரிவையையே விரும்புகின்றனர். அடுத்ததாக, ஹைட்ரோடைனமிக்ஸ் மற்றும் ஓஷன் இன்ஜினியரிங் (hydrodynamics and ocean engineering). கடலிலிருந்து ஆற்றல் எடுக்கும் படிப்பு, கடலின் தன்மைக்கு ஏற்ப கப்பல் வடிவமைப்பு போன்றவை குறித்த படிப்பாக இருக்கும்.

Also See: அயல்நாட்டு கல்வி 5: திறமையான மாணவர்களுக்கு ஏற்ற தரமான பிரான்ஸ் நாட்டுக் கல்வி!இதுபோன்றே ஒவ்வொரு துறை சார்ந்த படிப்பும் நிபுணத்துவம் வாய்ந்ததாகவே வழங்கப்படுகிறன. மூன்றாவதாக இசிஇ, இன்ஸ்ட்ரூமெண்டேஷன் போன்ற படிப்புகளைப் படித்தவர்கள் முதுகலைப் படிப்பாக ரோபோட்டிக்ஸ் படிக்கலாம். Industrial Engineering 4.0, IoT என்னும் இண்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ், ஏரோஸ்பேஸ் டர்ப்யூலன்ஸ் (Aerospace Turbulence) ஆகிய படிப்புகள் இந்தியாவில் தற்போதுதான் அறிமுகமாகி வருகிறது. ஆனால், பிரான்ஸில் இதற்கான முதுகலைப் படிப்புகளே கடந்த ஆறு ஆண்டுகளாகவே வழங்கப்பட்டு வருகின்றன.

Advanced Pharmaceutical Engineering என்ற படிப்பில் இதுவரையில் என்ன வியாதிக்கு என்ன மருந்துகள் உள்ளன என்ற பொது அறிவையும் மட்டும் வழங்காமல், புதிதாக என்ன கண்டுபிடிக்க முடியும் என்பதை ஊக்குவிக்கும் கல்வியாக இப்படிப்பு பிரான்ஸில் வழங்கப்படுகிறது. Advanced manufacturing என்னும் தொழில்நுட்பம் மூலம் உடலின் பாகங்களைக் கூட 3டி பிரிண்ட் கொண்டு வடிவமைத்து நமது உடல் பாகங்களுக்குப் பதிலாக மாற்றும் உறுப்பாகப் பொருத்திக்கொள்ளும் தொழில்நுட்பத்தை இப்படிப்பு கற்றுத்தருகிறது.

இதேபோல், பயோமெடிக்கல் இன்ஜினியரிங், மெடிக்கல் ரோபோடிக்ஸ் போன்ற படிப்புகள் மிகப்பெரும் வளர்ச்சியைப் பெற்றுகின்றன. இதற்கான தரமான கல்வியை பிரான்ஸ் பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. Biomass Energy, Transportation and Robotics, Agro Food Science போன்ற படிப்புகள் சர்வதேச அளவில் பிரான்ஸ் நாட்டில்தான் மிகவும் தரமானதாகவே வழங்கப்படுகிறது. அமெரிக்கர்கள் கூட பிரான்ஸ் நாட்டில் வந்து இக்கல்வியைப் பயில்கிறார்கள்.

speos


மேனேஜ்மென்ட் துறையைப் பொறுத்தவரையில் இன்ஜினியரிங் மேனேஜ்மென்ட், க்ளோபல் மேனேஜ்மென்ட், சப்ளை செயின் மேனேஜ்மென்ட், ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட், ஃபேஷன், முதலீடு, கார்ப்பரேட் பைனான்ஸ், அக்கவுண்ட்ஸ் ஆகிய படிப்புகளில் நிபுணத்துவம் வாய்ந்த படிப்புகள் பிரான்ஸிலேயே வழங்கப்படுகின்றன. புகைப்படக் கலைக்கு உலகிலேயே மிகவும் தரம் வாய்ந்த Speos Paris Photographic Institute என்னும் கல்வி நிறுவனம் பிரான்ஸில் தான் உள்ளது.

கலை படிப்புகளின் தரம் குறித்து அந்நாட்டின் கலைநயத்தை வைத்தே நம்மால் அறிந்துகொள்ள முடியும். உணவு தொடர்பான படிப்புகளில் ஃபுட் அண்ட் வைன் மேனேஜ்மெண்ட் என்னும் படிப்பு அதிக வாய்ப்புகள் கொண்ட படிப்பாக உள்ளது. இத்துறையில் பணியாற்ற சர்வதேச அளவில் நல்ல டிமாண்ட் உள்ளது.

மொத்தத்தில், பிரான்ஸ் பல்கலைக்கழகங்கள் இன்றைய தேவைக்கான கல்வியை மட்டும் வழங்காமல் அடுத்த ஐந்து, ஆறு ஆண்டுகளில் உலகின் கல்வித் தேவைகளைக் கண்டறிந்து, எந்தெந்த துறைகள் எதிர்காலத்தில் வளரும் என்பதை துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று பாடத்திட்டத்தை வடிவமைத்து மாணவர்களை செதுக்குகின்றன. உலகளவில் எந்தப் பாடத்தை எடுத்துக்கொண்டாலும் அதற்குண்டான டாப் பல்கலைக்கழகங்கள் பிரான்ஸ் நாட்டில்தான் உள்ளன. பிரான்ஸ் கல்வி பயின்றவர்களுக்கு சர்வதேச அளவிலும் மிகுந்த வரவேற்பு உள்ளது என்பதை மாணவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்” என விளக்கினார்.

-ராகினி ஆத்ம வெண்டி

Also See: அயல்நாட்டு கல்வி 4: அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படிக்க என்ன ஆவணங்கள் தேவை..?
First published: May 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்