• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • 69% இடஒதுக்கீடுக்கு பதில் அளிக்காத மத்திய அரசு: அண்ணா பல்கலைக்கழகத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ஏற்குமா தமிழக அரசு?

69% இடஒதுக்கீடுக்கு பதில் அளிக்காத மத்திய அரசு: அண்ணா பல்கலைக்கழகத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ஏற்குமா தமிழக அரசு?

அண்ணா பல்கலைக்கழகம்.

அண்ணா பல்கலைக்கழகம்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் அண்ணா பல்கலைக்கழகமும் ஆலோசனை நடத்தி தமிழக அரசுக்கு அறிக்கை சமர்க்க வேண்டும்.

  • Share this:
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் 69% இடஒதுக்கீடு முறையை மத்திய அரசு பின்பற்றுவது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனை நடத்தவுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்து கடந்த ஆண்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டது. இதனையடுத்து, 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. குழுவின் பரிந்துரை அடிப்படையில் சீர்மிகு அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் என இரண்டாகப் பிரிக்க முடிவு செய்து தமிழக அரசு அரசாணையைப் பிறப்பித்தது.

மேலும், சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவிகித இடஒதுக்கீட்டை தொடர்ந்து பின்பற்றுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் விளக்கம் கோரப்பட்டது. ஆனால், இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசின் தரப்பிலிருந்து தமிழக அரசுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்று உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் சிறப்பு அந்தஸ்தை ஏற்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிறப்பு அந்தஸ்து விவகாரம் தொடர்பாக இம்மாதத்தின் துவக்கத்தில் மத்திய அரசு தரப்பிலிருந்து  கடிதமொன்று அனுப்பப்பட்டது. அதில் சிறப்பு அந்தஸ்தை ஏற்பது தொடர்பாக இம்மாத இறுதிக்குள் தமிழக அரசு முடிவினை தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மத்திய அரசின் கடிதம் தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், உயர்கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் தமிழக முதலமைச்சருடன் இன்று  (20.5.2020 )  ஆலோசனையில் ஈடுபட்டது.

இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீடு முறைக்கு பாதிப்பில்லாமல் செயல்படுத்துவது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதன் முடிவுகளை தமிழக அரசிடம் வழங்க வேண்டும் என்றும் முடிவுவெடுக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. அந்த முடிவுகளின் அடிப்படையில் மத்திய அரசு வழங்கியுள்ள சிறப்பு அந்தஸ்தை ஏற்பது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கும் என்று தெரிகின்றது.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: